Sunday, August 27, 2017

உற்றாரை யான் வேண்டேன்,



உற்றாரை யான் வேண்டேன்,
ஊர் வேண்டேன், பேர் வேண்டேன்,
கற்றாரை யான் வேண்டேன்,
கற்பனவும் இனி அமையும்,
குற்றாலத்து அமர்ந்து உறையும்
கூத்தா, உன் குரை கழற்கே
கற்று ஆவின் மனம்போலக்
கசிந்து உருக வேண்டுவனே!

நூல்: திருவாசகம் (திருப் புலம்பல்)
பாடியவர்: மாணிக்கவாசகர்


உற்றாரை யான் வேண்டேன்
= எந்தெந்த உற்றவர்கள் உதவி செய்வார்கள் ன்னு கணக்குப் போட மாட்டேன்!
ஊர் வேண்டேன், பேர் வேண்டேன்
= எந்த ஊரில் உதவி கிடைக்கும்? பேர் (Influence) use பண்ணா உதவி கிடைக்குமா? போன்றவை வேண்டேன்!
கற்றாரை யான் வேண்டேன்
= பசியில், துன்பத்தில்….கற்றவர்களை நாடிச் சென்று கணக்குப் போட மாட்டேன்!

கற்பனவும் இனி அமையும் = இந்தக் கல்விக் கணக்குகள் அமைந்து விடும்! (அமைந்து விடும் = முடிந்து விடும்)
இனிமேல் புதிதாக எதையும் படித்துத் தெரிந்துகொள்ளவும் வேண்டாம்…

திருக்குற்றாலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே

(நான் வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்)

ஒலி செய்கின்ற கழல்களை அணிந்த உன்னுடைய திருவடிகள்மட்டும்தான்.

கன்றின்மீது அன்பு செலுத்தும் தாய்ப்பசுவைப்போலக் கசிந்து உருகி உன்னை வேண்டுகிறேன், நான் கேட்டதைத் தருவாயா?


==============

கற்று ஆவின் மனம்போல

ஒரு கிராம வாசி எழுதுகிறார்:
கற்று ஆவின் மனம் என்றால் என்ன?

கற்று = கன்றுகுட்டி
ஆ = பசு ( ஆ  இதிலிருந்து வந்ததுதான் ஆவின்)

நான், சென்னைக்கு வரும் முன், கிராமத்துப் பள்ளிக் கூடத்துல தான் பாடம்! வீட்டுக்குச் சில சமயம் சீக்கிரம் வந்துறலாம். நான் சீக்கிரம் வரும் போதெல்லாம்….என்னமோ தெரியல….எனக்குப் பயங்கரமாப் பசிக்கும், மதிய உணவு சாப்பிட்டு இருந்தாலும்! அம்மா.அம்மா ன்னு கத்திக்கிட்டே தான், ரேழியைத் தாண்டி, கூடத்துல குதிச்சி, அடுக்களைக்குள்ள ஓடுவேன்!

என் வரவைத் திடீர் ன்னு எதிர்பார்க்காத அம்மா "என்னடா, இவ்ளோ சீக்கிரம்?-" ன்னு மொதல்ல கேள்வி தான் கேப்பாங்க.

“யம்மா, பசிக்குது” ன்னு சொல்லணும்!

அப்பறம் தான், தட்டி உருட்டி, மண்ணெண்ணெய் ஸ்டவ்-ல்ல உஸ் உஸ் ன்னு அடிச்சி, தோசைக்கல் போட்டு, தோசை வார்ப்பாங்க! இதுக்கே பத்து-பதினைஞ்சி நிமிசம் ஆயிடும்! அதுக்குள்ள எனக்குப் பொறுக்காது! தட்டைத் தரையிலே தட்டிக்கிட்டே இருப்பேன்!

மாடு மேய்ச்சலுக்குப் போயிட்டு, தொழுவத்துக்குள்ளாற அதே சமயம் தான் வரும்! மூனு மணி வாக்குல
மணிச் சத்தம் ஜல்-ஜல் ன்னு கேக்கும்! அம்மாவைப் பாக்குறத்துக்கு முன்னாடியே சத்தத்தை வச்சி, ..ம்மாஆஆ ன்னு கன்னு குரல் குடுக்கும்! அப்போ, இந்த மாடு இருக்கே .இதுக்குச் சுரக்கும்! இது சுரந்துக்கிட்டே ஓடும்!

வழியெல்லாம் வைக்கோலு, தழை.சத சத ன்னு ஆயீரும்! நேராப் போயி, கன்னு கிட்ட முட்டி நிக்கும்….
கன்னு வாய் வச்சி இழுக்கணும் கூட இல்ல! நேரா வாயக் காட்டினாலே பால் விழுகும்!
இப்படி கன்றைப் பார்க்கும் முன்பே, அதுக்கு பால் குடுக்க மாடு ரெடீயா இருக்குது!
எப்படி, இழுக்கணும் கூட இல்லாம, நேரா வாயக் காட்டினாலே பால் வராப்புல ரெடி பண்ணி வைக்குது??

இறைவனும், அப்படியே! இறைவன்தான் அவனின் கன்றுகளாகிய நம்மைக் கண்டு கசிந்து உருக வேண்டும் அதைத்தான் மாணிக்க வாசகர் கற்று ஆவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுகிறேன் எனக் குறிக்கின்றார்
உன் கன்றைப் போல் உன் முன்னால் இறைஞ்சுகிறேன்..எனக்கு அதன் தாயான ஆவினைப் போல மனம் கசிந்துருகி எனக்கு அருள வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்…

இறைவன்

நம் நிலைமை, நம் பசியின் அளவு, ஏன் லேட்டு? ஏன் சீக்கிரம்? ன்னு கேள்வியெல்லாம் கேட்டுட்டு.அருள் சுரப்பதில்லை!
அந்த அருள்
ம்மாஆஆஆ ன்னு நம்ம குரல் கேட்ட மாத்திரத்திலேயே சுரந்து விடுகிறது!!
ஆனா, நாம குரல் குடுக்குறோமா?

நாம தான் ரொம்ப படிச்சவங்களாச்சே!
ஆதீனம் அளவுக்கு இல்லீன்னாலும், கொஞ்சமாச்சும் படிச்சிருக்கோம்-ல்ல?

நமக்கு ன்னு ஞான யோகம், கர்ம யோகம், பக்தி யோகம், சித்தாந்தம், சரியை, கிரியை ன்னு நிறைய இருக்கே! டைப் டைப்பாப் பேசுவோம்!
துன்பம் வந்தா?

எந்தக் கோயிலுக்குப் போவலாம்? எது “சக்தி வாய்ந்த பவர்ஃபுல் தெய்வம்?” ன்னு விசாரிப்போம்!:)
ஹோமம், பரிகாரம் ன்னு எத்தனை மேட்டரு இருக்கு?
இதெல்லாம் பண்ணிப் பாக்க, மனசு கணக்கு போடும்!

ஆனா, “அப்பா பெருமாளே” ன்னு குரல் குடுப்போமா?!
என் ஐயா, முருகா ன்னு அவனை நோக்கிக் குரல் குடுப்போமா?

குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா//
ஈசன் நடனம் (கூத்து) இடும் தலங்கள் எனப் புராணங்கள் சொல்பவை = ஐந்து!
அதில் கடைசி = குற்றாலம்!

. கனக சபை/ பொற் சபை = தில்லை (சிதம்பரம்)
2. ரஜத சபை/ வெள்ளி சபை = மதுரை
3. ரத்ன சபை = திருவாலங்காடு (புனிதா என்கிற காரைக்கால் அம்மைக்காக)
4. தாமிர சபை = திருநெல்வேலி
5. சித்ர சபை = குற்றாலம்
புராணம் சொல்லாத ஆறாவது சபை = நம் இதய சபை!

No comments:

Post a Comment