நம்மாழ்வர் 5-1
கை ஆர் சக்கரத்து* என் கருமாணிக்கமே! என்று என்று,*
பொய்யே கைம்மைசொல்லி* புறமே புறமே ஆடி.*
மெய்யே பெற்றொழிந்தேன்,* விதி வாய்க்கின்று காப்பார் ஆர்,*
ஐயோ கண்ணபிரான்!* அறையோ இனிப்போனாலே.
கையில் சங்கு சக்கரதாரியாக பகவான் இருப்பது நெஞ்சை
உருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் என் நெஞ்சம் மிக வலியது. எனவே அது ‘கை ஆர் சக்கரம்’
கண்டு உருகுவதாக இல்லை.
ஆனாலும் பக்தர்கள் இதில் மிகவும் ஈடுபட்டு உருகுகிறார்களே
என்று நானும் சும்மா ஒப்புக்கு “ கை ஆர் சக்கரத்து* என் கருமாணிக்கமே “ என்று பொய்யாகவே
கபடமாக அனேக தடவை சொன்னேன். பகவானிடம் ஈடுபடாமல் புற (உலக) விஷயங்களிலே ஈடுபட்டு இருந்தேன்
ஆனாலும் என்ன அதிசயம் பாருங்கள்! உண்மை பக்தர்கள்
பெறும் பேற்றை நானும் அடையுமாறு செய்தான் அந்த பகவான்.
பொய் செயலுக்கு மெய் பலன் எப்படிக் கிடைக்கும்?
பகவத் கிருபை அப்படி இருக்குமானால் யாரால்
என்ன செய்யமுடியும்?
பகவத் ருசி எனக்கு ஏற்படுவிட்டது. இனி நீ என்னை
விட்டு போக முடியுமா? அப்படி போவதானால் நீ தாராளமாக போகலாம். ( 2 பேராலும் முடியாது
என்று அமையும்)
போனாய் மாமருதின் நடுவே* என் பொல்லா மணியே,*
தேனே! இன்அமுதே!'* என்று என்றே சில கூத்துச்சொல்ல,*
தானேல் எம்பெருமான்* அவன் என் ஆகி ஒழிந்தான்,*
வானே மாநிலமே,* மற்றும்முற்றும் என் உள்ளனவே.
போனாய் மாமருதின் நடுவே* என் பொல்லா மணியே,* தேனே! இன்அமுதே!'*
என்று
யசோதை சொன்னது போல நானும் பொய்யாகச் சொன்னேன் (கூத்து கபட நாடகம் அடித்தேன்) ஆனால் பகவானோ என் கபடம்
பாராமல் பரிசு கொடுத்தான்
என் உள்ளே வந்து புகுந்து விட்டான். அதனால் ஐம் பூதங்களும் என்னுள்
ஆயிற்று என்கிறார்
உள்ளன மற்று உளவா* புறமே சில மாயம் சொல்லி,*
வள்ளல் மணிவண்ணனே!* என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்,*
கள்ள மனம் தவிர்ந்தே* உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன்,*
வெள்ளத்து அணைக்கிடந்தாய்* இனி உன்னை விட்டு என் கொள்வனே?
உள்ளே
பொய்யை வைத்து புறமே பொய் உரைத்து வள்ளலே மணி வண்ணா என்றெல்லாம் வேஷமாக சொன்னேன. நீயே
வஞ்சிக்கும் மாயவன், அப்ப்டி இருந்தும் உன்னையே வஞ்சித்தேன். அப்படியும் நீ எனக்கு அருள் செய்தமையால் இப்போது
என் கள்ள மனம் தவிர்த்து உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தேன்.
பாற்கடலில்
பள்ளி கொள்பவனே இனி உன்னை விட்டு எங்கு செல்வேன்
என் கொள்வன் உன்னை விட்டு என்னும்* வாசகங்கள் சொல்லியும்,*
வன் கள்வனேன் மனத்தை வலித்து* கண்ண நீர் கரந்து,*
நின்கண் நெருங்கவைத்தே* எனது ஆவியை நீக்ககில்லேன்,*
என்கண் மலினம் அறுத்து* என்னைக்கூவி அருளாய்கண்ணனே!
உன்னை
விட்டு நான் எதைப் பற்றுவேன் என்று நான் மனதார சொன்னாலும், நான் கள்வன். புற ஆசைகளைத்
தவிராதவன். அப்படிப்பட்ட என் மனதை வலித்துப்
பற்றி, புற ஆசை விடுவதால் எற்படும் துக்க கண்ணீரைதுடைத்து உன்னிடத்திலே மனதை நெருங்க
வைக்க முடியாதவனாக இருக்கிறேன்.
அப்படிப்பட்ட
மலிவான துர்குணம் அறுத்து என்னை கூவி அழைப்பாயா கண்ணனே
கண்ணபிரானை* விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை,*
நண்ணியும் நண்ணகில்லேன்* நடுவே ஓர் உடம்பில் இட்டு,*
திண்ணம் அழுந்தக் கட்டிப்* பல செய்வினை வன் கயிற்றால்,*
புண்ணை மறையவரிந்து* என்னைப் போர வைத்தாய் புறமே.
கண்ணனுக்கு
அருகில் சென்றும் செல்லாமற் போனேன். எனென்றால்
அதே கண்ணன் என்னை ஒரு உடம்பில் வைத்து முன் செய்த வினைகளாகிய வன் கயிற்றால் திடமாக
அழுந்தக் கட்டி இந்த உடல் தோஷங்களை வெளியில் தெரியாதபடி செய்து என்னை புற விஷயங்களிலே
நாட்டம் கொள்ளும்படிச் செய்துவைத்தான்
புறம் அறக் கட்டிக்கொண்டு* இரு வல்வினையார் குமைக்கும்,*
முறை முறை யாக்கை புகல்ஒழியக்* கண்டு கொண்டொழிந்தேன்,*
நிறம் உடை நால்தடம்தோள்* செய்யவாய் செய்ய தாமரைக்கண்,*
அறம்முயல் ஆழிஅங்கைக்* கருமேனி அம்மான் தன்னையே.
அதே
கண்ணணை (அழகு பொருந்திய விசாலமான நான்கு திருத்தோள்களையும்
சிவந்த திருப்பவள வாயும் தாமரைக்கண்களையும் தர்ம
ரக்ஷணம் செய்யும் சக்கரக் கைகளையும் உடைய)கண்ட வுடன் என்னைக் கட்டி இருக்கும், மீண்டும்
மீண்டும் பிறக்க வைக்கும் நல்வினை தீவினைகளை ஒழிந்தன.
அம்மான் ஆழிப்பிரான்* அவன் எவ் இடத்தான்? யான் ஆர்?,*
எம் மா பாவியர்க்கும்* விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர்,*
'கைம்மா துன்பு ஒழித்தாய்!' என்று கைதலைபூசல் இட்டே,*
மெய்ம் மால் ஆயொழிந்தேன்* எம்பிரானும் என் மேலானே.
கண்ண
பிரான் எங்கே நான் எங்கே. என் போன்ற எந்த மகா பாவிகளுக்கும் விதி வாய்த்தால் நற்கதி
கிடைக்கும். (பொய்யாக பகவானிடம் ஈடுபட்ட எனக்கே அருள் செய்தமையால்)
யானையின்
துயர் தீர்த்தவனே என்று கைதூக்கி அஞ்சலி செய்த நான் இப்பொது (கபடு நீங்கி) உண்மை பக்தன்
ஆனேன்
மேலாத் தேவர்களும்* நிலத் தேவரும் மேவித் தொழும்,*
மாலார் வந்து இனநாள்* அடியேன் மனத்தே மன்னினார்,*
சேல் ஏய் கண்ணியரும்* பெரும் செல்வமும் நன்மக்களும்,*
மேலாத் தாய் தந்தையும்* அவரே இனி ஆவாரே.
மேலான தேவர்களும் இவ்வுலக பக்தரும்
தொழும் திருமால் என்னுடைய மனத்திலும் அமர்ந்தார், இனி என் மனைவி,செல்வம்,
பிளைகளும் பெற்றோரும், அவரே ஆவார்
ஆவார் ஆர் துணை என்று* அலை நீர்க் கடலுள் அழுந்தும்-
நாவாய் போல்,* பிறவிக்கடலுள் நின்று நான் துளங்க,*
தேவு ஆர் கோலத்தொடும்* திருச் சக்கரம் சங்கினொடும்,*
ஆஆ என்று அருள்செய்து* அடியேனொடும் ஆனானே.
அலை கடலில்
காப்பார் யாரும் இன்றி கடலுள் அழுந்தும் படகு போல்
பிறவிக் கடலில்
நான் தத்தளிக்க, திவ்ய வடிவத்தோடு, சங்கு சக்கரத்தொடும்
ஆஹா (இதோ நான்
இருக்கிறேன்) என்று அருள் செய்து (மகா பாவியாகிய) என்னை ச் சேர்ந்தானே
No comments:
Post a Comment