பிரபஞ்சத்தின் மொத்தக் கால அளவு
இது பிரபஞ்சத்தில் நாம் இருக்கும்
பால் வெளி கேலக்சியின் (milky way galaxy) மையத்தை, நமது சூரிய மண்டலம் சுற்றி வருவதன்
அடிப்படையில் பகுக்கக்ப் பட்டது.
பால் வெளி கேலக்சியின் மையப் பகுதியை
சூரியனும், அதனுடன் சேர்ந்து நாமும் சுற்றி வருகிறோம்.
ப்ரபஞ்சத்தின் மொத்த கால அளவு
என்பது பிரம்மாவின் ஆயுள் காலம். அதாவது
ப்ரம்மனின் 100 வருடங்கள் என்றும்,
ப்ரம்மாவின் ஒரு பகல் பொழுது என்பது
ஒரு கல்பம் என்றும் (4.32 பில்லியன் வருடங்கள்).
ஒரு இரவு என்பது இன்னொரு 4.32 பில்லியன் வருடங்கள் என்றும்
ஆக ப்ரம்ம தேவனின் ஒரு நாள் என்பது
8.64 பில்லியன் வருடங்கள் என சொல்லப்படுகிறது.
ப்ரம்மனின் ஆயுட்காலம் 100 X
360 நாட்கள். அதுவே நம் ப்ரபஞ்சத்தின் ஆயுட்காலம் என்று சொல்லப்படுகிறது
ஆகவே (100 x 360 x 8.64) பில்லியன் வருடங்கள் என்று நம்
பிரபஞ்சத்தின் மொத்தக் கால அளவு என்பது பாரதப் பாரம்பரிய நூல்களிலும், ஜோதிட
சித்தாந்தங்களிலும் சொல்லப்பட்டுள்ளது.
பிரம்மா
என்பதே காலம். காலத்துக்கு உருவம் இல்லை. அதேபோல பிரம்மனுக்கும் உருவம் கொடுக்கப்படவில்லை
என்று தோன்றுகிறது
ஒரு கல்பம் 4.32 பில்லியன் வருடங்கள்
என்று பார்த்தோம்
இதில் ஒரு மஹா யுகம் என்பது கல்பத்தின்
1/1000 பகுதி. அதாவது 43,20,000 வருடங்கள்.
ஒரு மஹாயுகத்தை 4 யுகங்களாக பிரித்திரிக்கிறார்கள்.
சம பகுதிகளாக பிரிக்கப்படவில்லை,
சத்ய யுகம், திரேதா யுகம், த்வாபர யுகம், கலி யுகம். என்பது
இந்த 4 யுகங்கள்.
யுகங்கள்
|
வருடங்கள்
|
|
கலியுகம்
|
4,32,000
|
|
துவாபர
யுகம்
|
8,64,000
|
2 மடங்கு
|
திரேதா
யுகம்
|
12,96,000
|
3 மடங்கு
|
கிருத
யுகம்
|
17,28,000
|
4 மடங்கு
|
மொத்தம்
|
43,20,000 ஒரு மஹா/ சதுர் யுகம்)
|
|
71 சதுர் யுகம் கொண்டது ஒரு மன்வந்திரம்
14 மன்வந்திரம் கொண்டது ஒரு கல்பம்
1 மன்வந்திரம் = 71 x
43,20,000 = 30,67,20,000 வருடங்கள்
இதே போல 14 மன்வந்திரங்கள் உள்ளன.
(ஒவ்வொரு மன்வந்திரத்திலும் குறிப்பிட அடையாளங்களை உடைய மக்கள் தோன்றுவார்கள். )
ஒவ்வொரு மன்வந்திரத்தின் முடிவிலும்
ஒரு 17,28,000 வருடங்கள் சந்திகாலம் என்று
சொல்லப்படும். (suffix). இந்த காலத்தில் உலகம்
நீரில் மூழ்கி இருக்கும்.
M1, M2, M3… M14 என்பது மன்வந்திரங்கள்
1,2,4,..15 என்பது சந்திகள்
ஆக 14 மன்வந்திரங்கள் + 15 சந்திகள்
சேர்ந்தால் 4.32 பில்லியன் வருடங்கள் வரும். (1 BILLION = 100 கோடி) = 432 கோடி வருடங்கள்.
I--------------------------------------------4.32 BILLION
YEARS----------------------------------------------------------I
1
|
|
2
|
|
3
|
|
4
|
|
5
|
|
15
|
M1
|
M2
|
M3
|
M4……..
|
M14
|
||||||
|
|
|||||||||
172800
|
306720000
|
|||||||||
Numbers
|
Years
|
Years
|
||||||||
manvanthra
|
14
|
306720000
|
4294080000
|
|||||||
Sandhi
|
15
|
1728000
|
25920000
|
|||||||
time of 1 kalpam
|
4320000000
|
|||||||||
இந்த நாலு யுகங்கள் ஒரு சுழற்ச்சி என்று கொண்டால், இது போல 1000 சுழற்ச்சிகள்
கொண்டது ஒரு கல்பம்
ஒவ்வொரு மன்வந்தரத்திற்கும் ஒரு
மனு உண்டு. ஒரு சப்தரிஷி கூட்டமும். உண்டு
இதில் இப்பொழுது நடக்கும் பிரம்மனின்
பகல் பொழுது என்று சொல்லப்படும் கல்பம், ஸ்வேத வராஹ கல்பம் எனப்படும். இந்தக் கல்பம் ஆரம்பித்து ஆறு மன்வந்திரங்கள்
ஆகி, ஏழாவது மன்வந்திரத்தில், 28 ஆவது சதுர் மஹா யுகத்தில், கலி யுகம் ஆரம்பித்து இன்று
5112 -ஆவது வருடத்தில் நாம் இருக்கிறோம்.
ஆக இன்னும் கலி யுகம் 4,26,000
ஆண்டுகள் நீடிக்கும் என்று சொல்லலாம்
ப்ரம்மா என்பதே காலம். காலத்துக்கு உருவம் இல்லை. அதேபோல பிரம்மனுக்கும்
உருவம் கொடுக்கப்படவில்லை என்று தோன்றுகிறது
==========================
மானுட யுக கணக்கு அல்லது லௌகீக யுக கணக்கு
மேலே சொன்ன ப்ரபஞ்ச கணக்கில், சதுர் மகாயுகத்தின் 150 இல் ஒரு
பாகமாக இந்த கணக்கு அமையும்.
மனித வாழ்கையின் முக்கிய அடிப்படை
தர்மமும், கர்மமும் ஆகும். ஒருவர் முன் ஜன்மத்தில் செய்த தர்ம, கர்மத்தின் அடிப்படையில்தான்
இந்த ஜன்மம் அமைகிறது என்பதாலே இப்படி சொல்லப்படுகிறது. ராசிச் சக்கரத்தில் தர்மம்,
கர்மம் ஆகியவற்றின் அதிபதிகள் குரு கிரகமும், சனி கிரகமும் ஆகும். அதனால் அந்த குரு,
சனி கிரகங்களின் சேர்க்கை ஒரு யுகம் ஆயிற்று. அதாவது, இந்த இரண்டு கிரகங்களும், ஒருமுறை
ஓரிடத்தில் சந்தித்துவிட்ட பிறகு, மீண்டும் அதே இடத்தில் சந்திக்க 60 வருடங்கள் ஆகின்றன.
இதுவே மனிதனது வாழ்க்கையின் அளவு.
மனிதனின் ஆயுட்காலம் 120 வருடங்கள். என்று சொல்லப்படுகிறது.
இதில் ஒரு ஏறு முகம், ஒரு இறங்கு முகம் வருவது ஒரு முழு சுற்று
ஆகும். ஒரு மனிதனின் முதல் 60 வருடங்கள் ஏறு முகம். அது வளரும் காலம். அது முடிந்தவுடன்,
மனிதன் மீண்டும் பிறப்பதாகக் கொண்டு அறுபதாம் கல்யாணம் என்று செய்கிறார்கள். இது உண்மையில்
ஆயுள் விருத்திக்குச் செய்யும் ஹோமம் ஆகும். அடுத்த 60 வருடங்கள் இறங்கு முகம். 60
+ 60 = 120 வருடங்கள் கொண்டது மனிதனின் முழு ஆயுள். இதன் அடிப்படையில் கிரக தசைகள்
120 வருடங்களுக்கு வருகின்றன.
120 வருட அடிப்படையில் அடுத்த அளவு மானிட யுக அல்லது காலக் கணக்கு
வருகிறது.
மகாபாரதத்தில் (3-187) மார்கண்டேய முனிவர் பாண்டவர்களுள் மூத்தவரான
யுதிஷ்டிரனுக்குச் சொல்லும் யுகக் கணக்கு பின் வருமாறு.
120 x120 = 14,400 வருடங்கள் ஏறுமுகம்
இந்தக் காலத்தை மார்கண்டேய முனிவர் நான்கு யுகங்களாகப் பிரித்துள்ளார்.
இதுவே மானுட யுகத்திற்கு அடிப்படை.
யுகங்கள்
|
வருடங்கள்
|
மடங்கு
|
சந்தி
|
மொத்தம்
|
கலியுகம்
|
1,000
|
|
100+100
|
1200
|
துவாபர
யுகம்
|
2,000
|
2
|
200+200
|
2400
|
திரேதா
யுகம்
|
3000
|
3
|
300+300
|
3600
|
கிருத
யுகம்
|
4000
|
4
|
400+400
|
4800
|
மொத்தம்
|
10000
|
|
|
12000
|
இத்துடன் முன்சந்தி 10% = 1200 வருடங்கள், பின் சந்தி 1200 வருடங்கள்
கூட்ட்டினால் 14,400 வருடங்ககள்.
இதுவே மார்கண்டேயர் தரும் மானுட அளவிலான சதுர் யுகக் கணக்கு.
இந்த 14,400 வருடங்கள் ஏறு முகம். இன்னொரு 14,400 வருடங்கள்
இறங்கு முகம். இப்படி 28,800 வருடங்கள் ஒரு
சுற்று.
இது தான் சப்த ரிஷி மண்டல யுகம் அல்லது சப்த ரிஷி மண்டல
சுழற்ச்சி.
28,800 என்பது பிரபஞ்ச கலி யுகத்தின் 1/15 அளவு. சதுர் மஹாயுகத்தின்
1/150 அளவு,
நன்றி: இணைய தளங்கள்
No comments:
Post a Comment