இராமானுஜருக்கும் சோழ அரசனுக்குமிடையே நிலவிய
பகைமை குறித்து ஆராய
வேண்டும் என்ற ஆவல்
ஏற்படுவதற்கு, அண்மையில்
நிகழ்ந்த இரு நிகழ்வுகளே காரணமாக அமைந்தன.
1. அவற்றுள் முதல் நிகழ்வு, பரவலாகப் பேசப்பட்ட, 'தசாவதாரம்' திரைப்படத்தில் இடம் பெற்ற, சிதம்பரம்
கோவிந்தராசப் பெருமாள் சிற்பம் கடலில் எறியப்பட்டது தொடர்பான கலையுலகச் சித்திரிப்பு
ஆகும்.
இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்துல, அவனை மூளைச் சலவை செய்து சில சைவர்கள்
போட்ட
ஆட்டம்! அதுல பாவம், அப்பாவி சைவ-வைணவர்களிடையே சமயப்
பூசலாய் போய் விட்டது!
தில்லையில் நடராசர் ஆலயத்துக்கு உள்ளேயே திருச்சித்ரகூடம் என்னும் கோவிந்தராசப் பெருமாள் கோயிலும் இருக்கு! அங்கு பெருமாள், ஈசனின் நடனத்தைப் பார்த்துக் களிக்கும் கோலத்தில் இருக்காரு! அவர் மீது திருமங்கை ஆழ்வார் 32 பாசுரம் பாடியுள்ளார். அதுவும் சிவபெருமானுக்குப் பிடிச்சமான சங்கராபரண ராகத்தைப், பெருமாள் மீது பாடி, சமய ஒற்றுமையை..வளர்த்து..இருக்காங்க!
ஆனால் மூளை கெட்டுப் போயி, சோழன் கோவிந்தராசர் சிலையை வேரோடு பிடுங்கி, தில்லைக்குப் பக்கத்தில் உள்ள பிச்சாவரம் கடற்கரையில் மூழ்கடிக்க வைத்தான். இதை ஒட்டக்கூத்தரும் அவர் பாட்டுல சொல்லி இருக்காரு! அதனால் கோயிலைச் சுற்றி இருந்த வைணவக் குடும்பங்களுக்குப் பல தொல்லைகள்! பல சங்கடங்கள்!
தில்லையில் நடராசர் ஆலயத்துக்கு உள்ளேயே திருச்சித்ரகூடம் என்னும் கோவிந்தராசப் பெருமாள் கோயிலும் இருக்கு! அங்கு பெருமாள், ஈசனின் நடனத்தைப் பார்த்துக் களிக்கும் கோலத்தில் இருக்காரு! அவர் மீது திருமங்கை ஆழ்வார் 32 பாசுரம் பாடியுள்ளார். அதுவும் சிவபெருமானுக்குப் பிடிச்சமான சங்கராபரண ராகத்தைப், பெருமாள் மீது பாடி, சமய ஒற்றுமையை..வளர்த்து..இருக்காங்க!
ஆனால் மூளை கெட்டுப் போயி, சோழன் கோவிந்தராசர் சிலையை வேரோடு பிடுங்கி, தில்லைக்குப் பக்கத்தில் உள்ள பிச்சாவரம் கடற்கரையில் மூழ்கடிக்க வைத்தான். இதை ஒட்டக்கூத்தரும் அவர் பாட்டுல சொல்லி இருக்காரு! அதனால் கோயிலைச் சுற்றி இருந்த வைணவக் குடும்பங்களுக்குப் பல தொல்லைகள்! பல சங்கடங்கள்!
கடலில் போட்ட கோவிந்தராசர் மூலவர் சிலை மூழ்கிப் போனது! ஆனால்
உற்சவரின் சிலையை மட்டும்
எப்படியோ காப்பாற்றிய வைணவக் குடும்பங்கள், அந்தச் சிலையை இராமானுசரிடம் சேர்பிக்கிறார்கள். சிலையை வைத்துக்
கொண்டு என்ன செய்வது? அதே
இடத்தில் வைத்தால் மீண்டும்
பிரச்சனைதான்!
பிரச்சனை சிலைக்கா? இல்லையே!...அதைச் சுற்றியுள்ள அப்பாவி மக்களுக்குத் தானே! இதை நன்கு உணர்ந்த "உண்மையான" சமயத் துறவி அவர்! ஈகோ பார்க்காமல் சிலையைக் கொண்டு போய், கீழ்த் திருப்பதியில் நிறுவுகிறார்! அங்கு புதிதாகக் கோவிந்தராசப் பெருமாள் ஆலயம் ஒன்றை எழுப்புகிறார்! இன்றளவும் கீழ்த் திருப்பதியில் இருப்பது தில்லை கோவிந்தராசரின் உற்சவரே!
ஆண்டுகள் உருண்டோட சோழன் மறைகிறான்! நல்லிணக்கம் நிலவும் போது, புதிதாக மூலவர்-உற்சவர் சிலைகளைச் செய்து மீண்டும் தில்லையில் இருந்த இடத்திலேயே,(சில தீட்சிதர்கள் எதிர்ப்பையும் மீறி) நிறுவுகிறார்கள்! இன்றும் தில்லை நடராசப் பெருமான் ஆலயத்துக்குள் கோவிந்தராசரும் பள்ளி கொண்டுள்ளார்.
பிரச்சனை சிலைக்கா? இல்லையே!...அதைச் சுற்றியுள்ள அப்பாவி மக்களுக்குத் தானே! இதை நன்கு உணர்ந்த "உண்மையான" சமயத் துறவி அவர்! ஈகோ பார்க்காமல் சிலையைக் கொண்டு போய், கீழ்த் திருப்பதியில் நிறுவுகிறார்! அங்கு புதிதாகக் கோவிந்தராசப் பெருமாள் ஆலயம் ஒன்றை எழுப்புகிறார்! இன்றளவும் கீழ்த் திருப்பதியில் இருப்பது தில்லை கோவிந்தராசரின் உற்சவரே!
ஆண்டுகள் உருண்டோட சோழன் மறைகிறான்! நல்லிணக்கம் நிலவும் போது, புதிதாக மூலவர்-உற்சவர் சிலைகளைச் செய்து மீண்டும் தில்லையில் இருந்த இடத்திலேயே,(சில தீட்சிதர்கள் எதிர்ப்பையும் மீறி) நிறுவுகிறார்கள்! இன்றும் தில்லை நடராசப் பெருமான் ஆலயத்துக்குள் கோவிந்தராசரும் பள்ளி கொண்டுள்ளார்.
இரண்டாம் குலோத்துங்கன் தில்லையில் செய்தது இவ்வளவு தான்! சோழன்
கொடுமைகள் எல்லாம் திருவரங்கத்தில்
தான்! இராமானுசரை கர்நாடக மாநிலம் மேலக்கோட்டைக்கு ஓட ஓட விரட்டியது, அவருடைய வயதான குரு பெரிய நம்பிகள், மற்றும் இளையவரான சீடர் கூரத்தாழ்வான் - இருவரின் கண்களைப்
பிடுங்கிய பயங்கரம், பின்னர்
சோழனே கிருமி நோய் கண்டு
"கிருமி கண்ட சோழனாய்" செத்தது எல்லாம் தனிக்கதை
2. அடுத்த நிகழ்வு, ஆய்வுலகு தொடர்பானது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின்
முன்னாள் இயக்குநர் முனைவர் இரா. நாகசாமி அவர்களால் எழுதப்பட்டுள்ள Ramanuja
- Myth and Reality என்ற நூலில், (பதிப்பு: Tamil Arts Academy, Chennai - 90, 2008)
"இராமானுஜர் மிகச்
சிறந்த ஒரு வேதாந்தியே தவிர, ஒரு சீர்திருத்தவாதி என்பதற்கோ, திருவரங்கம் கோயிலை
நிர்வகித்தார் என்பதற்கோ, சோழ அரசனால் துன்புறுத்தப்பட்டார் என்பதற்கோ எந்த
ஆதாரமும் இல்லை. இராமானுஜரை, ஒடுக்குமுறைக்கு ஆளான ஒரு புரட்சியாளர் என்று
சித்திரிப்பதற்காக வலிந்து மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியே,
வைணவர்களால் புனையப்பட்ட இக்கட்டுக்கதைகள்; சொல்லப்போனால் சோழ
அரசர்கள் சமயப் பொறை மிக்கவர்கள்; பின்னமாகிப்போன தெய்வச் சிலைகளை நீர்நிலையில்
இடுவதென்பது சாஸ்திரபூர்வமான ஒரு நடவடிக்கையே. இரண்டாம் குலோத்துங்கன் சிதம்பரம்
நடராசர் கோயிலிலிருந்த கோவிந்தராசப் பெருமாளின் சிதைந்து போன சுதையுருவத்தைக் கடலில்
இட்ட செயலை ஒட்டக்கூத்தர் தம்முடைய மூவர் உலாவிலும் தக்கயாகப்பரணியிலும் சற்று
மிகைப்படுத்திக் கூறிவிட்டார்; அவ்வளவுதான்
என்று
தீர்மானமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இராமானுஜர்க்கும்
சோழ அரசனுக்குமிடையில் நிலவிய பகைமை என்பது வெறும் கற்பனையா என்பதை தெளிவு படுத்தவே இக்கட்டுரை.
Stage காட்சி 1
ஒரு ராஜா (முதல் குலோத்துங்கன்) . அவருக்கு இரண்டு மனைவிகள். ஒவ்வொருத்தியின் மூலமும் ஒரு மகன்.இரண்டு மனைவிகளுக்கும் செல்வாக்கு குறித்து பூசல். இது பிள்ளைகளயும்
பற்றிக் கொள்கிறது
ராஜா, சமாதானம் கருதி ஒரு பிள்ளையை, (விக்கிரமன் என்று வைத்துக்கோள்வோம்) ஒரு 800 மைல் தள்ளி தன் ராஜ்ஜியத்தின் ஒரு கோடியில் உள்ள பகுதியை ஆண்டுவா என்று அனுப்பிவிடுகிறான்.
இன்னொரு பிள்ளையை பராந்தகன் என்று வைத்துக்கொள்வோம்) தன் வசமே வைத்துக்கொள்கிறான் காலப் போக்கில் பராந்தகனை இளவரசனாகவும் அறிவிக்கிறான்.
ஏமாற்றப்ப்பட்ட விக்கிரமன் தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறான். அருகிலுள்ள வேற்றுநாட்டு அரசர்களின் நட்பைப் பெற்று, அருகில் உள்ள பராந்தகனின் ஆதரவாளர்களது சிற்றரசுகளைத் தன் வயப்படுத்துகிறான்.
உடனே தகப்பனார் சமாதான முயற்ச்சியில் இறங்கி, பராந்தகா, நீ அங்கே போ; விக்கிரமா நீ இங்கே வா என்கிறார். ஆனாலும் விக்கிரமன் சமாதானம் அடையவில்லை. இங்கிருந்தபடியே, தன் பழைய நண்பர் உதவியுடன், பராந்தகனைப் போரில் ஈடுபடச் செய்து, அவன் உயிர் இழக்கும்படி செய்கிறான்.
தந்தை இறந்ததும், விக்கிரமன் அரசனாகிறான். இவனே விக்கிரம சோழன்
இந்த செய்தியை சரித்திர பூர்வமாக இப்படி
சொல்லலாம்.
கிபி 1070: தந்தை வழியில் வேங்கிச் சாளுக்கியனும் தாய்
வழியில் சோழனுமான விஷ்ணுவர்த்தன ராஜேந்திரன் வசம் சோழ அரசு சென்றடைகிறது. வரலாற்று
ஆசிரியர்களால் முதற் குலோத்துங்க சோழன்
எனக் குறிப்பிடப்படும் சோழ அரசன் இவனே. பட்ட்த்து ராணி சோழ வமச பெண்மணி மதுராந்தகி..
இவர்களின் மகன் பராந்தகன்(மூன்றாம் பராந்தகன்). சோழ அரசனாவதற்கு உள்ள
எதிர்பார்ப்புகளுடன் வளர்ந்து வந்தான்
கி பி 1080: முதற் குலோத்துங்க சோழன், ஹொய்சளச் சிற்றரச வம்சத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியை
மணம் புரிந்தான்.
இவர்களுக்குப் பிறந்தவன் விக்கிரம சோழன். அந்நிலையில் மதுராந்தகி மரணமடைந்ததால்
ஹொய்சள குல மனைவியின் செல்வாக்கு அதிகரித்தது. விக்கிரம சோழன்
அரசியலில் செல்வாக்குப் பெற
வேண்டுமென்பது அந்த ஹொய்சள குலப் பெண்ணின் ஆசையாக இருந்தது
கி பி 1093: ஆண்டில் முதல் குலோத்துங்கன் தன் இரண்டாம் மகன் விக்கிரமனை
வேங்கிப் பகுதியின் (presentத்ற்போதைய ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதிear
srikakulam) ஆளுநராகக் குலோத்துங்கன் நியமித்தான். 6 அப்போது விக்கிரமனுக்குப் பன்னிரண்டு வயதிருக்கலாம்.
கி பி 1110: தனது மூத்த மகன் பராந்தகனைக் குலோத்துங்கன்
கி.பி. 1110ஆம்
ஆண்டில் பட்டம் சூட்டிச் சோழ நாட்டு இளவரசனாக்கினான். சோழ அரியணை மேல் கண்வைத்திருந்த விக்கிரமன்,
பராந்தகனுக்கு எதிராகவும் சுயாட்சி அமைப்பதற்கு உரிய நேரத்தை எதிர்பார்த்து
-மைசூர்ப் பகுதியில் ஆட்சிபுரிந்து
வந்த ஹொய்சளர்களுக்கு (mysore) ஆதரவாகவும் செயல்படத் தொடங்கினான்.
அதே ஆண்டு ஹொய்சள அரசன் முதல் வல்லாளனின்
தம்பியான பிட்டிதேவன் என்கிற விஷ்ணுவர்த்தனன் பேளூர் கங்கவாடிப் பகுதிகளை (கோலார், தும்குர்) கங்கர்களிடமிருந்து கைப்பற்றினான். கி.பி.1116: ஆண்டில் தகடூர் (தர்மபுரி) அதியமான்கள்
வசமிருந்து கொங்கு ம்ண்டலத்தைச்
சாளுக்கியர் உதவியுடன் பிட்டி தேவன் கைப்பற்றினான். இந்த முயற்சிகளில், விக்கிரமன்
விஷ்ணுவர்த்தன்னுக்கு ஆதரவாக செயல்பட்டான். காரணம் இந்த் பகுதி ஆளுனர்கள்
மூன்றாம் பராந்தகனின் ஆதரவாளர்கள்.
சகோதரர்களை சேர்த்து வைக்கும சமாதான முயற்சியாக.
கி பி 1118 இல் முதற்குலோத்துங்கன்,
விக்கிரமனை வேங்கி நாட்டிலிருந்து வரவழைத்துச் சோழ
இளவரசனாக முடி சூட்டி, மூன்றாம் பராந்தகனை வேங்கி ஆளுநராக அனுப்பிவைத்தான். ஆனால்
விக்கிரம சோழன், மூன்றாம்
பராந்தகனுக்கு அந்தச் சிறிய சலுகை காட்டப்படுவதைக்கூட விரும்பவில்லை.
கி
பி 1119: விக்கிரம சோழன் மேலைச் சாளுக்கிய அரசன் மூன்றாம்
விக்கிரமாதித்தன் உதவியுடன் விக்கிரம சோழன் வேங்கியின் மீது தாக்குதல் தொடுத்தான் இத்தாக்குதலின்
விளைவாக மூன்றாம் பராந்தகன் மரணமடைந்தான் எனக் கருதப்படுகிறது.8
சரியாக இதே கால அளவில் இராமானுஜர் திருவரங்கத்தில்
வைணவ சமய குருபீடத்தில் அமர்ந்துவிட்டார் எனத் தெரிகிறது.9 இதே காலகட்டத்தில் ஹொய்சள நாட்டில் விஷ்ணுவர்த்தனன்
(பிட்டிதேவன்) இராமானுஜரைத் தனது குருவாக ஏற்றுச் செயல்படத் தொடங்கியிருந்தான்.
Stageகாட்சி 2
முதற்குலோத்துங்கனின் மகன் விக்கிரமசோழன் கி.பி. 1118ஆம் ஆண்டிலிருந்து சோழ நாட்டின் அரசனாகச்
செயல்படத் தொடங்குகிறான்.
தந்தை முதற்குலோத்துங்கன் 1125 இல் மரணம் அடைகிறார். விக்கிரம சோழன், இராமானுஜரிடம்
மிகுந்த மரியாதை
வைத்திருந்தான். அகளங்க நாட்டு ஆழ்வார் என்றே வைணவர்களால்
சிறப்பிக்கப்படும் அளவுக்குத் திருவரங்கம் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்தான். ஆழ்வார்
என்பது ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்பதைக் குறிக்கும் 'ஆள்வார்' என்ற பட்டத்தின்
திரிபே ஆயினும், வைணவர்களைப்
பொருத்தவரை தங்களால் மிக உயர்வாகப் போற்றப்படுவோர்க்கே இப்பட்டத்தைச் சூட்டியுள்ளனர்.
(There are in all 105 Chola
inscriptions in the Srirangam temple. Of these, 65 are assignable
to Kulottunga I and 14 to the reign of his son, Vikrama Chola between the years 1070 and 1125 AD
Vikrama Chola (also known as
Akalankan) is
also said to have built a gosala and a shrine for Krishna in the North East of the fifth Prakara. He also
built a shrine for Rama in the South
West and for Nachiyar in the North
West. The huge Garuda in the Peria Tirumandapa fourth enclosure known as "Alinadan Tiruveedhi" was
installed during his reign. The fifth
enclosure - Akalankan Tiruveedhi was paved during his reign. திருவிக்கிரமன்
திருவீதி (தற்போதைய கீழை உத்தரவீதி) இன்றும் உள்ளது.)
சைவர்களின் வழக்கில் கோவில் என்றாலே தில்லையைக் குறிப்பதுபோல, வைணவர்களின்
வழக்கில் கோயில் என்பது திருவரங்கத்தைத்தான் குறிக்கும். சோழ அரசர்களின்
பல கல்வெட்டுகளில் சிதம்பரம் கோயில், சோழர்களின் 'குலநாயகம்' எனக்
குறிப்பிடப்படுவது போன்று, திருவரங்கம் திருமால் கோயில் ”சோழற்குக்
குலதனமாய் வருகிற கோயில் என்று கல்வெட்டொன்றில் குறிப்பிடப்பெற்றுள்ளது. 16 எனவே,
திருவரங்கம் திருமால் சோழ மன்னர்களின் குலதெய்வம் என்றே
கருதுமளவுக்கு அக்கோயில் சோழ அரச குலத்தவருக்கு நெருக்கமான கோயிலாகத்
திகழ்ந்துள்ளது. இராமானுஜர் தென்னிந்திய வைணவத் தத்துவ இயலின் குருமார்களுள் முதன்மையானவராக
விக்கிரம சோழனால் அங்கீகரிக்கப்பட்டிருந்தார். கி.பி. 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வைணவ சமயத்தைப்
பின்பற்றிய கருணாகரத் தொண்டைமான்23 வாணாதிராயர், சம்புவரையர்
போன்றவர்களே சோழர்களின் படைத் தலைமைப் பொறுப்பினை ஏற்றிருந்துள்ளனர். . இது, சோழ அரசே வைணவச்
சார்பான ஓர் அரசோ என்ற மயக்கத்தை ஏற்படுத்துவதோடு, இராமானுஜர் சோழ அரசகுரு என்ற தகுதியை அடைந்துவிட்டது போன்ற
ஒரு தோற்றத்தை உருவாக்குவதையும் வரலாற்று ஆய்வாளர்கள் உணர முடியும்
STAGEகாட்சி 3
கி பி 1133: விக்கிரம சோழன், தன் மகன் இரண்டாம்
குலோத்துங்கனுக்கு இளவரசப் பட்டம் கட்டினான். இரண்டாம் குலோத்துங்கன், வீர சைவ நெறியினரான
ஒட்டக்கூத்தரிடம் கல்வி பயின்ற மாணவனாவான்.
எனவே, தன் தந்தையைச் சீடன்
போன்று நடத்தத் துணிந்த, எல்லை தாண்டிச் செல்வாக்குச் செலுத்திய, சோழ அரசகுரு போன்று
செயல்பட்ட, இராமானுஜர்
மீது அவன் துவேஷம் கொண்டிருக்க்கூடும். கவிராக்ஷசர் ஒட்டக்கூத்தரின் போதனைகளும்
இவன் மனதிலிருந்த வெறுப்புத்தீயை
விசிறிவிட்டிருக்க வாய்ப்புண்டு.
இராமானுஜரை அவமதிக்க, தக்க தருணத்தை எதிர்பார்த்துக் குலோத்துங்கன்
காத்திருந்தான் எனத் தோன்றுகிறது. தில்லைக் கோயிலை விரிவுபடுத்திக்கட்டி, அக்கோயிலுக்குப்
பொன்னாலான ஓடுகள் வேய்கின்ற திருப்பணியைக் குலோத்துங்கன் தொடங்கினான்.
இப்பணி முழுவீச்சில் நடைபெறுகிற தருணத்தில், கி.பி. 1138ஆம் ஆண்டில்
விக்கிரம சோழன் மரணமடைந்தான்.
அதே ஆண்டில் இரண்டாம் குலோத்துங்கன் தில்லைக் கோயிலில்
நந்திவர்ம பல்லவன் காலத்திலிருந்தே இருந்து வந்த கோவிந்தராஜப் பெருமாளின் சிலையினை
(அல்லது சுதையுருவத்தினை) அங்கிருந்து நீக்கிக் கடலில் எறிந்திடச் செய்தான்.24
(பின்னமாகிப்போன தெய்வச் சிலைகளை நீர்நிலையில்
இடுவதென்பது சாஸ்திரபூர்வமான ஒரு நடவடிக்கையே. இரண்டாம் குலோத்துங்கன் சிதம்பரம்
நடராசர் கோயிலிலிருந்த கோவிந்தராசப் பெருமாளின் சிதைந்து போன சுதையுருவத்தைத்தான் கடலில் இடசெய்தான் என்று தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் முனைவர்
இரா. நாகசாமி கூறுகிறார்.)
அதாவது, சோழர்களின் ‘குலநாயகமான' தில்லைக் கோயிலில் சைவ சமயம் சார்ந்த வழிபாடுகள்
மட்டுமே நடைபெறும்வண்ணம்
நடவடிக்கைகளை மேற்கொண்டான். அதாவது, சோழர்களின் ‘குலநாயகமான' தில்லைக் கோயிலில் சைவ சமயம் சார்ந்த வழிபாடுகள்
மட்டுமே நடைபெறும்வண்ணம்
நடவடிக்கைகளை மேற்கொண்டான்
இம்மன்னனுடைய அரசியல் அதிகாரிகளுள், தென்னிந்தியச் சைவ
சமயத்தின் 'சூதபெளராணிகரா'ன, தொண்டை மண்டல
வேளாளர் சமூகத்தவரான சேக்கிழார் முதன்மையானவர். (சேக்கிழாரின் பெரியபுராணம், கி.பி. 1139-40ஆம் ஆண்டுகளில்
அரங்கேறிற்றென அறிஞர்கள் கருதுகின்றனர்)
இப்படியொரு மாறுபட்ட சூழல் உருவாகிவிட்டதன் விளைவாகத் தில்லைக் கோயில்
முழுமையாகச் சோழ அரச குடும்பத்தின்
ஆதிக்கத்தின் கீழ்க் கொணரப்பட்டது போலத் திருவரங்கத்தையும் கொணர்கிற ஒரு முயற்சி
தொடங்கிற்று
இராமானுஜர், சோழர்களின் அதிகாரபூர்வத் தெய்வமான சிவபிரானின்
முதன்மையையும் - அதன் வழி, சோழ அரசனின் ஆதிக்கத்தையும் ஏற்கச் செய்யவேண்டும் என்ற
வகையில் குலோத்துங்கனால் ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டது என வைணவ நூல்கள்
தெரிவிக்கின்றன. இதுவே, வைணவ சமயத்துக்கு
எதிராகச் சோழ அரசன் மேற்கொண்ட முதற்செயல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
அதாவது, கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள சோழ அரண்மனைக்கு நேரில் வந்து
அரசனைச் சந்திக்குமாறு இரண்டாம் குலோத்துங்கனிடமிருந்து இராமானுஜர்க்கு அழைப்பு
அனுப்பப்பட்டது என்றும் இராமானுஜர்க்கு 'ராஜரீகமான' அவமரியாதை காத்திருக்கிறது என்பதைப்
புரிந்துகொண்டு, இராமானுஜரின்
முதன்மைச் சீடர் பெரியநம்பி காவியுடை உடுத்திக்கொண்டு தாமே இராமானுஜர் எனக் கூறிக்கொண்டு, இராமானுஜரின்
மற்றொரு சீடரான கூரத்தாழ்வான் உடன்வரக் கங்கை கொண்ட சோழபுரம் சென்றார் என்றும் இராமானுஜர்
திருவரங்கத்திலிருந்து தப்பிச் சென்று கொங்கு மண்டலம் வழியாக ஹொய்சள பிட்டி தேவனின்
ஆட்சிப் பகுதியாகிய மேல்கோட்டையை அடைந்தார் என்றும் வைணவர்கள் நம்புகின்றனர். கங்கை
கொண்ட சோழபுரத்தில் திருமாலை விடச் சிவபெருமானே பெருந்தெய்வம் என ஏற்குமாறு
(இராமானுஜர் போல் வேடமிட்டிருந்த) பெரியநம்பியும் அவருடன் சென்ற கூரத்தாழ்வானும்
வற்புறுத்தப்பட்டனர் என்றும் அதனை ஏற்க மறுத்ததால் அவ்விருவரின் கண்களும்
குருடாக்கப்பட்டன என்றும், வேதனை தாங்காமல் பெரியநம்பி இறந்துபட, கூரத்தாழ்வான் குருடான நிலையில் திருவரங்கம்
திரும்பி வந்த போது
அரச தண்டனைக்கு அஞ்சி வைணவர்கள் அவரைத் திருவரங்கத்தில் தங்க அனுமதிக்க மறுத்து விட்டனர்
என்றும் பாண்டி நாட்டுத் திருமாலிருஞ்சோலை (அழகர் கோயில்) சென்று அங்குக்
கூரத்தாழ்வான் தங்கினார் என்றும் நம்பப்படுகின்றன. திவ்யசூரிசரிதம், குருபரம்பரை ஆகிய வைணவ
நூல்களில் இந்நிகழ்வு குறிப்பிடப்பட்டுள்ளது. இது கி.பி. 1138ஆம் ஆண்டில் நிகழ்ந்திருக்க வேண்டும்.
கி.பி. 1141ஆம் ஆண்டுக்குரிய இரண்டாம் குலோத்துங்கனின் கல்வெட்டு திருவரங்கம் கோயிலில்
உள்ளது. இரண்டாம் குலோத்துங்கன் வைணவத்துக்கு விரோதியாக இருந்தால் இவ்வாறு
திருவரங்கம் கோயிலில் அவனது கல்வெட்டு பொறிக்கப்பட்டிருக்குமா என தொல்பொருள்
ஆராய்ச்சியாளர் இரா. நாகசாமி ஐயுறுகின்றார் மேலும் இரண்டாம் குலோத்துங்கனின் ”பூமன்னு பதுமம் பூத்த ஏழுலகும்”எனத்தொடங்கும்மெய்க்கீர்த்தியில், அவன் தன்னைத் திருமாலாகவே உருவகப்படுத்திக் கொள்கிறான்.
எனவே அவனை வைணவ விரோதியாகச் சித்திரிக்க முயல்வது தவறு என்றும் இரா. நாகசாமி
கருத்துத் தெரிவிக்கின்றார்.
நாம் மேலே கண்ட வரலாற்றுப் பின்னணியில் பார்த்தால், இரண்டாம்
குலோத்துங்கன் வைணவ சமயக் குரவரான இராமானுஜர் மீது கொண்டிருந்த வன்மம்தான் வைணவ சமயத்தை
இழிவுபடுத்துகிற செயலாக வெளிப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இராமானுஜரின் பிரதிநிதிகள் 'தண்டிக்கப்பட்டு', இராமானுஜரே சோழ
நாட்டைவிட்டு வெளியேறிட நேர்ந்து திருவரங்கத்தில் இராமானுஜரின் அடியார் என்று
சொல்லிக் கொள்வோர் யாருக்கும் இடம் கொடுக்கக் கூட வைணவர்கள் அஞ்சுகிற நிலை
ஏற்பட்டுவிட்டதால் இரண்டாம் குலோத்துங்கன் தனது நோக்கத்தில் வெற்றி பெற்றுவிட்டதாகக்
கருதியிருக்க வேண்டும். '
சோழர்களின் குலதனமான' திருவரங்கத் திருத்தலம் 'தூய்மைப் படுத்தப்பட்டு'விட்ட நிலையில் குலோத்துங்கனின் கருணா கடாட்சம் திருவரங்கத்
திருமாலின் மீது திரும்பியதில் வியப்பென்ன இருக்க முடியும்?
இராமானுஜர் மேல்கோட்டையில் 12 ஆண்டுகள் இருந்தார்
என்றும், அப்போது ஹொய்சள விஷ்ணுவர்த்தனனுக்குக்
குலகுரு போன்றே திகழ்ந்தார் என்றும் வைணவர்கள் நம்புகின்றனர். இது முற்றிலும் ஏற்கத்தக்கதே.
கிருமி கண்ட சோழன் (CANCERதொண்டையில் புற்றுநோய்THE
THROAT) என்று இந்த
இரண்டாம் குலோத்துங்கனைக் குறிப்பிடுகிறார்கள்.
ஆனால் இதற்கு வரலாற்று ஆதாரம்
கிடையாது.
STAGEகாட்சி 4
கி பி 1150 ஆம் ஆண்டில் இரண்டாம் குலோத்துங்கன் இறந்தான்.
அவனையடுத்து ஆட்சிக்கு வந்த இரண்டாம்
இராஜராஜன், இராமானுஜரைத்
தனது முன்னவன் இழிவுபடுத்தியது மிகப் பெரும் தவறென உணர்ந்தான். அந்த ஆண்டிலே
இராமானுஜர் மேல்கோட்டையிலிருந்து திருவரங்கத்துக்குத் திரும்பி வருவதற்குரிய
ஏற்பாடுகளைச் செய்தான். திருவரங்கத்துக்குத் திரும்பிய பின்னர் கி.பி. 1150இல் இராமானுஜர்
தடைப்பட்டுப் போய் இருந்த பிரம்ம சூத்திர பாஷ்யம் எழுதும் பணியை மீண்டும் தொடங்கி
கிபி 1155இல் நிறைவேற்றினார்.
அடுத்த ஆண்டில் (கி.பி. 1156)
இரண்டாம் இராஜராஜன் திருவரங்கம் கோயிலில் மூன்றாம் திருச்சுற்று மதில்
எழுப்பி அத்தெருவுக்கு "இராஜ கம்பீரன் திருவீதி" என்று தனது பட்டப்
பெயரையும் சூட்டினான். இத்திருவீதியில் இராமானுஜரின் மடத்தை மீண்டும் நிறுவினான்.
இராமானுஜரின் ஆணைப்படிக் கேரள தேச வேணாட்டு அரசன் கோதைரவிவர்மன் கொடையாகக் கொடுத்த
மாணிக்கம், முத்து, பொற்காசுஆகியவற்றைப்
பெற்று அவற்றைக் கோயிலின் பண்டாரத்தில் சேர்க்க ஏற்பாடு செய்தான். இச்செய்தியினைக் கல்வெட்டிலும் பொறிக்கச்
செய்தான்.
இராமானுஜரின் மரணம் (கி.பி. 1077 +
120) கி.பி. 1197 அளவில் நிகழ்ந்திருக்க வேண்டும். இராமானுஜரே, தமது
இறுதிக்காலத்தில் கூரத்தாழ்வான் மகனான பராசர பட்டரைத் தமது வாரிசாகப் பதவியில் நியமித்தார்
தமக்குப் பின்னால் மடத்தை நிர்வகிப்பதற்குக்
கலப்பின பட்டர் ஒருவரைத்
தமது வாரிசாக நியமித்ததன் மூலம் இராமானுஜர் வைணவ சமயம் என்பது மக்கள் சமயம்
என்பதை நிலைநாட்டினார்
அதே வேளையில் வாரிசு அரசியலைச் சார்ந்தும், வருணக் காப்புச்
சட்டங்களைச் சார்ந்தும் ஆட்சி நடத்திய சோழ அரச குலம் சமூக-அரசியல் நிர்பந்தங்களை
எதிர்கொள்வதற்காக ஹொய்சள அரச குடும்பத்துடன் கொண்ட உறவின் காரணமாகத் தனது தனித் தன்மையை
- குலப் பெருமித உணர்வை - இழந்தது.
இரண்டாம் இராஜராஜனுக்குப் பின்னர் கி.பி. 1163 அளவில் சோழ அரச குடும்பத்தில் வாரிசு குறித்த
குழப்பம் ஏற்பட்டது.30 1190 அளவில் குறுநிலத் தலைவர்களின் எழுச்சியாலும் குகையிடி கலகங்கள்31 போன்றவற்றாலும் சோழர் ஆட்சிக்கும் நடுக்கம் ஏற்பட்டது
இந்நடுக்கத்தைத் தவிர்க்கின்ற நேர்ச்சையாகவே ”நடுக்கந்தவிர்த்த
ஈசன்” (கம்பஹரேஸ்வரர்)
கோயில் குடந்தைக்கு அருகிலுள்ள திரிபுவனத்தில் எழுப்பப்பட்டது. இறுதியில் கி.பி. 1218இல் பாண்டியர்
படையெடுப்பின் விளைவாகச் சோழ அரச குலமே நிலை குலைந்து போனது; கி.பி. 1278க்குப்பின் சோழ அரசே சுவடின்றி மறைந்தது.
திருவாரூர்த் தியாகராசர், கிருமி கண்ட சோழன்
வைணவத்துக்கும் இராமானுஜர்க்கும் இழைத்த கொடுமையால் சோழ அரச வம்சமே ஆட்சியிழந்து போகச் சபித்துவிட்டார்
என வைணவ நூல்கள் குறிப்பிடுகின்றன.
உயர்ந்தோரின் உள்ளக் கொதிப்பில் விளைந்த சாபங்கள், செல்வத்தைத்
தேய்க்கும் படையாக வடிவெடுத்த அற்புதங்கள் பல, காவியக் காட்சிகளாக இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. அவற்றை
நம்புவதும் நம்பாதிருப்பதும் நம் விருப்பம்.
இராமானுஜர் வாழ்க்கையில் நடந்ததாகக் கூறப்படும்
இத்தகைய அற்புத நிகழ்வுகளை
ஒதுக்கிவிட்டுப் பார்த்தாலும், இராமானுஜரின் வெகுஜனச் செல்வாக்கு என்பது கேள்விக்கிடமற்ற
வரலாற்று உண்மை எனத் தெரிகிறது. இதுவே இரண்டாம் குலோத்துங்கன் இராமானுஜர்மீது கொண்ட காழ்ப்புணர்வுக்கு
முதன்மையான காரணம் என்றும் நம்மால் உய்த்துணர முடிகிறது
நன்றி:
தமிழினி MAY 2009
கட்டுரையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட்து
No comments:
Post a Comment