சப்த ரிஷி கஸ்யபர்
சப்த ரிஷிகளில் ஒருவர்
அதிரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர்,கௌதமர், காஸ்யபர், ஆங்கிரஸ் இந்த 7 பேர் சப்த ரிஷிகள்
வானத்தில் தெரியும் ஒரு நக்ஷத்திர கூட்டத்திற்கு சப்த ரிஷி மண்டலம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். (க்ரேட் டிப்பர் கான்ஸ்டெல்லேஷன்)
இவர் பிரம்மாவின் மானச புத்திரன். பிரம்மா தன் படைப்புகளை காப்பாற்றுவதற்காக 11 பேரைப் படைத்தார். அவர்கள் ப்ரஜாபதிகள் எனப்படுவர்,
கஸ்யபர் அத்தகைய ப்ரஜாபதிகளில் ஒருவர்.
பாகவதம் 11 ப்ரஜாபதிகள் என்கிறது
(விஸ்வகர்மன், மரீசி, அத்ரி, ஆங்கீரஸ், புலஸ்தியர், புலஹர், க்ரது,வசிஷ்டர், தக்ஷன், பிருகு, நாரதர் என்பவர் 11 ப்ரஜாபதிகள்
மஹாபாரதம் 14 பேர்களை ப்ரஜாபதிகள் என நாரதர் வாயிலாகச் சொல்கிறது.
மேற்கூறிய பட்டியலில், விஸ்வகர்மன், நாரதர் தவிர்த்து வேறு 5 பெயர்கள் சேர்த்து தருகிறது.
காஸ்யபர், ப்ராசேதஸ், கௌதமர், ப்ரஹ்லாத, கர்த்தமர்
பிரம்மா நினைக்க காஸ்யபர் பிறந்தார். நினைத்ததும் பிறந்ததால் மானச புத்திரன் என்று பெயர்.
மேலே சொன்ன 11 பேரும் பிரம்மாவின் மானச புத்திரர்கள்.
மரீசியின் புதல்வர் இவர் என்றும் சில புராணங்கள் கூறுகிறது
தக்ஷ ப்ரஜாபதி தன் 13 பெண்களை கஸ்யபருக்கு மணம் செய்விக்கிறார்
அதிதி (தேவர்களின் தாய் ஆகிறாள்)
திதி (அசுரர்களின் தாய் ஆகிறாள்)
கத்ரு (பன்னாகம், உரகம் என்ற நாக இனத்தின் தாய் ஆகிறாள்)
வினிதை (அருணன், கருடன் இவர்களின் தாய்)
தனு (தானவர்களின் (அசுர இனம்) தாய் ஆகிறாள்)
அரிஷ்டா (கந்தர்வர்களின் தாய் ஆகிறாள்)
சுரசா (நாக இனத்தின் தாய் - அனுமனை இலங்கைக்குச் செல்லும் வழியில் மறிப்பவள் இவளே)
சுரபி (காமதேனு என்னும் பசு)
தாம்ர
க்ரோதவசா (மாமிசம் உண்ணும் பிசாசுகளின் தாய்)
இடா
விஷ்வா
முனி (அப்ஸரஸ்களின் தாய் ஆகிறாள்)
காஷ்மிர் பள்ளத்தாக்கு ஒரு காலத்தில் ஓர் உயர்ந்த இடத்தில் உள்ள ஒரு ஏரியாக இருந்தது என்றும்
காஸ்யபர் அதை ஒரு பள்ளத்தாக்காக மாற்றினார் என்றும் அதனால் காஷ்யப்மிரா என்னும் பெயர் அடைந்து பின்னர் காலப்போக்கில் பெயர் மருவி காஷ்மிர் ஆனது என்று சொல்லப்படுகிறது.
காஸ்யப கோத்திரம் இவர் தொட்டு.
இவர் 4 மூல கோத்திர கர்த்தாக்களுள் ஒருவர். (பிருகு, காஸ்யபர், ஆங்கீரஸ், வசிஷ்டர்)
No comments:
Post a Comment