6
ஆம் திருமுறை
அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்
அருமருந்தை
அகன்ஞாலத் தகத்துள் தோன்றி
வருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு
வான்புலன்கள்
அகத்தடக்கி மடவா ரோடும்
பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப்
பொதுநீக்கித்
தனைநினைய வல்லோர்க் கென்றும்
பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத
நாளெல்லாம் பிறவா நாளே
மனத்து
அகத்தான் தலை மேலான் வாக்கினுள் உள்ளான்
வாயாரத் தன் அடியே பாடும்
தொண்டர்
இனத்து
அகத்தான் இமையவர் தம் சிரத்தின் மேலான்
ஏழு அண்டத்துக்கு அப்பாலன் இப்பாற் செம்பொன்
புனத்து
அகத்தான் நறுங்கொன்றைப் போதினுள் உள்ளான்
பொருப்பின் இடையான் நெருப்பிடையான் காற்றி னுள்ளான்
கனத்தகத்தான்
கயிலாயத்து உச்சியில் உள்ளான்
காளத்தியான் அவன் என் கண்ணுளானே
எல்லாஞ்
சிவனென்ன நின்றாய் போற்றி
எரிசுடராய் நின்ற இறைவா போற்றி
கொல்லார்
மழுவாட் படையாய் போற்றி
கொல்லுங் கூற்றொன்றை உதைத்தாய் போற்றி
கல்லாதார்
காட்சிக் கரியாய் போற்றி
கற்றா ரிடும்பை களைவாய் போற்றி
வில்லால்
வியனரணம் எய்தாய் போற்றி
வீரட்டங் காதல் விமலா போற்றி
வாயானை
மனத்தானை மனத்துள் நின்ற
கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான்
தன்னைத்
தூயானை
தூவெள்ளை ஏற்றான் தன்னைச்
சுடர்த் திங்கள் சடையானை தொடர்ந்து நின்ற
என்
தாயானை
தவமாய தன்மையானைத்
தலையாய தேவாதி தேவர்க்கு என்றும்
சேயானைத்
தென்கூடல் திருஆலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே
"நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்து ஏத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்
அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீயென்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே. "
எல்லா உலகமும் ஆனாய், நீயே; ஏகம்பம் மேவி இருந்தாய்,
நீயே;
நல்லாரை நன்மை அறிவாய், நீயே; ஞானச்சுடர் விளக்கு
ஆய் நின்றாய், நீயே;
பொல்லா வினைகள் அறுப்பாய், நீயே; புகழ்ச் சேவடி
என்மேல் வைத்தாய், நீயே;
செல்வாய செல்வம் தருவாய், நீயே திரு ஐயாறு
அகலாத செம்பொன்சோதீ!.
முந்தை
காண், மூவரினும் முதல் ஆனான் காண், மூ
இலை வேல் மூர்த்தி காண், முருக வேட்குத்
தந்தை
காண், தண் கட மா முகத்தினாற்குத் தாதை
காண், தாழ்ந்து அடியே வணங்குவார்க்குச்
சிந்தைகாண்,
சிந்தாத சித்தத்தார்க்குச் சிவன் அவன்
காண், செங்கண் மால் விடை ஒன்று ஏறும்
எந்தை
காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி
ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.
அத்தா!
உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்; அருள்
நோக்கில்-தீர்த்த நீர் ஆட்டிக் கொண்டாய்;
எத்தனையும்
அரியை நீ எளியை ஆனாய்; எனை
ஆண்டு கொண்டு இரங்கி ஏன்று கொண்டாய்;
பித்தனேன்,
பேதையேன், பேயேன், நாயேன், பிழைத்
தனகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றே!
இத்தனையும்
எம் பரமோ? ஐய! ஐயோ! எம்பெருமான்
திருக்கருணை இருந்த ஆறே!.
குலம்
பொல்லேன்; குணம் பொல்லேன்; குறியும் பொல்லேன்;
குற்றமே பெரிது உடையேன்; கோலம் ஆய
நலம்
பொல்லேன்; நான் பொல்லேன்; ஞானி அல்லேன்;
நல்லாரோடு இசைந்திலேன்; நடுவே நின்ற
விலங்கு
அல்லேன்; விலங்கு அல்லாது ஒழிந்தேன் அல்லேன்;
வெறுப்பனவும் மிகப் பெரிதும் பேச வல்லேன்;
இலம்
பொல்லேன்; இரப்பதே ஈய மாட்டேன்; என் செய்வான்
தோன்றினேன், ஏழையேனே?.
கருவுற்ற
நாள் முதலாக உன் பாதமே காண்பதற்கு
உருகிற்று
என் உள்ளமும் நானும் கிடந்து அழிந்து எய்த்து ஒழிந்தேன்
திருவொற்றியூரா
திருஆலவாயா திருஆரூரா
ஒருபற்று
இலாமையும் கண்டு இரங்காய் கச்சி ஏகம்பனே.
“வளைத்து நின்று ஐவர் கள்வர் வந்து எனை நடுக்கம் செய்யத்
தளைத்து வைத்து உலையை ஏற்றித் தழல் எரி மடுத்த நீரில்
திளைத்து நின்று ஆடுகின்ற ஆமைபோல் தெளிவிலாதேன்
இளைத்து நின்று ஆடுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே”
சொல்லானை,
சுடர்ப் பவளச் சோதியானை, தொல்
அவுணர் புரம் மூன்றும் எரியச் செற்ற
வில்லானை,
எல்லார்க்கும் மேல் ஆனானை,
மெல்லியலாள் பாகனை, வேதம் நான்கும்
கல்லாலின்
நீழல் கீழ் அறம் கண்டானை,
காளத்தியானை, கயிலை மேய
நல்லானை,
நம்பியை, நள்ளாற்றானை,-நான்
அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.
என்றும்
நாம் யாவர்க்கும் இடைவோம் அல்லோம்;
இரு நிலத்தில் எமக்கு எதிர் ஆவாரும் இல்லை;
சென்று நாம் சிறு தெய்வம் சேர்வோம் அல்லோம்;
சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்;
ஒன்றினால் குறை உடையோம் அல்லோம் அன்றே;
உறு பிணியார் செறல் ஒழிந்திட்டு ஓடிப் போனார்;
பொன்றினார் தலை மாலை அணிந்த சென்னிப்
புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உளோமே.
இன்று அரைக்கண்
உடையார் எங்கும்
இல்லை இமயம் என்னும்
குன்றர் ஐக்கு அண் நல் குலமகள்
பாவைக்குக் கூறு இட்ட
நாள்
அன்று அரைக் கண்ணும் கொடுத்து
உமையாளையும் பாகம்
வைத்த
ஒன்றரைக் கண்ணன் கண்டீர்
ஒற்றியூர் உறை உத்தமனே
இவ்வுலகில்
முழுக்கண் உடையவர்களே காணப்படுகின்றனரே யன்றி அரைக்கண் உடையவர் ஒருவரும் இரார். ஆனால்,
இமவான் என்று போற்றப்படும் மலைத் தலைவனுக்கு வளர்ப்புமகளாகக் கிட்டிய நல்ல மேன்மையை
உடைய பார்வதிக்கு உடம்பைச் செம்பாதியாகப் பங்கிட்டுக் கொடுத்த காலத்திலே தன் முக்கண்களில்
செம்பாதியான ஒன்றரைக் கண்கள் அவளுக்காயினதால். மீதியுள்ள ஒன்றரைக் கண்ணனாகவேயுள்ளார்
திருவொற்றியூரில் உறையும் உத்தமனாம் எம்பெருமான்.
பாவநாசத்
திருக்குறுந்தொகை
கங்கை
ஆடில் என்? காவிரி ஆடில் என்?
கொங்கு
தண் குமரித்துறை ஆடில் என்?
ஒங்கு
மாகடல் ஓதம் நீராடில் என்?
எங்கும்
ஈசன்ழு எனாதவர்க்கு இல்லையே.
வேதம்
ஓதில் என்? வேள்விகள் செய்கில் என்?
நீதி
நூல்பல நித்தல் பயிற்றில் என்?
ஓதி
அங்கம் ஓர் ஆறும் உணரில் என்?
ஈசனை
உள்குவார்க்கு அன்றி இல்லையே.
கூட
வேடத்தர் ஆகிக் குழுவில் என்?
வாடி
ஊனை வருத்தித் திரியில் என்?
ஆடல்
வேடத்தன் அம்பலக்கூத்தனைப்
பாடலாளர்க்கு
அல்லால், பயன் இல்லையே.
நன்று
நோற்கில் என்? பட்டினி ஆகில் என்?
குன்றம்
ஏறி இருந் தவம் செய்யில் என்?
சென்று
நீரில் குளித்துத் திரியில் என்?
என்றும்,
ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே.
கோடி
தீர்த்தம் கலந்து குளித்து அவை-
ஆடினாலும்,
அரனுக்கு அன்பு இல்லையேல்,
ஓடும்
நீரினை ஓட்டைக் குடத்து அட்டி
மூடி
வைத்திட்ட மூர்க்கனொடு ஒக்குமே.
7ஆம்
திருமுறை
சுந்தரர்
பித்தா!
பிறைசூடீ! பெருமானே! அருளாளா!
எத்தால்
மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை
வைத்தாய்;
பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
அத்தா!
உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
ஊன்
ஆய், உயிர் ஆனாய்; உடல் ஆனாய்; உலகு ஆனாய்;
வான்
ஆய், நிலன் ஆனாய்; கடல் ஆனாய்; மலை ஆனாய்;
தேன்
ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள்-துறையுள்
ஆனாய்!
உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? .
எங்கேனும்
இருந்து உன் அடியேன் உனை நினைந்தால்
அங்கே
வந்து என்னொடும் உடனாகி நின்றருளி
இங்கே
என்வினையை அறுத்திட்டு எனையாளும்
கங்கா
நாயகனே கழிப்பாலை மேயானே.
பொன்னார்
மேனியனே
புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார்
செஞ்சடைமேல்
மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே
மாமணியே
மழபாடியுள் மாணிக்கமே
அன்னே
உன்னையல்லால்
இனியாரை நினைக்கேனே
கண்ணாய்
ஏழுலகுங்
கருத்தாய அருத்தமுமாய்ப்
பண்ணார்
இன்றமிழாய்ப்
பரமாய பரஞ்சுடரே
மண்ணார்
பூம்பொழில்சூழ்
மழபாடியுள் மாணிக்கமே
அண்ணா
நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே
பாடுவார்
பசி தீர்ப்பாய்; பரவுவார் பிணி களைவாய்;
ஓடு
நன் கலன் ஆக உண் பலிக்கு உழல்வானே!
காடு
நல் இடம் ஆகக் கடு இருள் நடம் ஆடும்
வேடனே!
குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
பாடுவார்
பசி தீர்ப்பாய்; பரவுவார் பிணி களைவாய்;
ஓடு
நன் கலன் ஆக உண் பலிக்கு உழல்வானே!
காடு
நல் இடம் ஆகக் கடு இருள் நடம் ஆடும்
வேடனே!
குருகாவூர் வெள்ளடை நீ அன்றே! .
பண்ணிடைத்
தமிழொப்பாய்
பழத்தினிற்
சுவையொப்பாய்
கண்ணிடை
மணியொப்பாய்
கடுவிருட்
சுடரொப்பாய்
மண்ணிடை
யடியார்கள்
மனத்திடர்
வாராமே
விண்ணிடைக்
குருகாவூர்
வெள்ளடை
நீயன்றே.
வாழ்வாவது
மாயம்மிது
மண்ணாவது திண்ணம்
பாழ்போவது
பிறவிக்கடல்
பசிநோய்செய்த பறிதான்
தாழாதறஞ்
செய்ம்மின்தடங்
கண்ணான்மல ரோனுங்
கீழ்மேலுற
நின்றான்றிருக்
கேதாரமெ னீரே
தில்லை
வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்;
திரு
நீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்;
இல்லையே
என்னாத இயற்பகைக்கும் அடியேன்;
இளையான்
தன் குடிமாறன்அடியார்க்கும் அடியேன்;
வெல்லுமா
மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்;
விரி
பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன்;
அல்லி
மென் முல்லை அந்தார் அமர் நீதிக்கு அடியேன்;
ஆரூரன்
ஆரூரில் அம்மானுக்கு ஆளே
பத்தராய்ப்
பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்;
பரமனையே
பாடுவார் அடியார்க்கும் அடியேன்;
சித்தத்தைச்
சிவன் பாலே வைத்தார்க்கும் அடியேன்;
திரு
ஆரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்;
முப்போதும்
திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்;
முழுநீறு
பூசிய முனிவர்க்கும் அடியேன்;
அப்பாலும்
அடிச் சார்ந்த அடியார்க்கும் அடியேன்;
ஆரூரன்
ஆரூரில் அம்மானுக்கு ஆளே.
மற்றுப்
பற்று எனக்கு இன்றி, நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்;
பெற்(ற்)றலும்
பிறந்தேன்; இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்;
கற்றவர்
தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
நல்-தவா!
உனை நான் மறக்கினும் சொல்லும், நா நமச்சிவாயவே
No comments:
Post a Comment