Monday, October 21, 2024

எளிய தமிழ் -தேவார- பிரபந்த- பாடல்கள் -2 (முருகர்)

 


முருகன் பாடல்கள்


அருவமும் உருவம் ஆகி

   அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்

பிரமமாய் நின்ற சோதிப்

   பிழம்பதோர் மேனி யாகிக்

கருணைசேர் முகங்கள் ஆறும்

   கரங்கள் பன்னிரண்டும் கொண்டே

ஒரு திரு முருகன் வந்தாங்கு

   உதித்தனன் உலகம் உய்ய  (கந்த புராணம்)


முருகன் பாடல்கள் (திருமுருகாற்றுப்படை)


 "குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும்
      அன்றுஅங்கு அமரர் இடர் தீர்த்ததுவும் - இன்று என்னைக்
         கைவிடா நின்றதுவும் கற்பொதும்பில் காத்ததுவும்
            மெய்விடா வீரன்கை வேல்!" - - - - - - - - - - - - 2

   "வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
      தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
         குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
            துளைத்தவேல் உண்டே துணை." - - - - - - - - - - - - 3

   "இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்
      கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்
         பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட
            தனி வேலை வாங்கத் தகும்." - - - - - - - - - - - - 4

   "உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
      பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்
         கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும்
            வேலப்பா! செந்தில் வாழ்வே!" - - - - - - - - - - - - 5

   "அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
      வெஞ்சமரில் 'அஞ்சல்!' எனவேல் தோன்றும் - நெஞ்சில்
         ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
            'முருகா!' என்று ஓதுவார் முன்." - - - - - - - - - - - - 6

   "முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன்
      மருகனே! ஈசன் மகனே! ஒருகை முகன்
         தம்பியே! நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
            நம்பியே கைதொழுவேன் நான்." - - - - - - - - - - - - 7

   "காக்க கடவியநீ காவாது இருந்தக்கால்
      ஆர்க்குப் பரமாம் அறுமுகவா! - பூக்கும்
         கடம்பா! முருகா! கதிர்வேலா! நல்ல
            இடம்காண் இரங்காய் இனி!" - - - - - - - - - - - - 8

சளத்திற் பிணிபட்டு அசட்டு க்ரியைக்குள் தவிக்கும் என் 
உளத்தில் ப்ரமத்தைத் தவிர்ப்பாய் அவுணர் உரத்து உதிரக்
குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்து வெற்றிக்
களத்தில் செருக்கிக் கழுதாட வேல் தொட்ட காவலனே
 

தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானமென்றும்
   இடுங்கோ ளிருந்த படியிருங் கோளெழு பாருமுய்யக்
      கொடுங்கோபச் சூருடன் குன்றந் திறக்கத் தொளைக்கவை வேல்
         விடுங்கோ னருள்வந்து தானே யுமக்கு வெளிப்படுமே.

 

தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
   வைவைத்த வேற்படை வானவ னேமற வேனுனைநான்
      ஐவர்க் கிடம்பெறக் காலிரண் டோட்டி யதிலிரண்டு
         கைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே.


புத்தியை வாங்கிநின் பாதாம் புயத்திற் புகட்டியன்பாய்
   முத்தியை வாங்க அறிகின்றி லேன்முது சூர்நடுங்கச்
      சத்தியை வாங்கத் தரமோ குவடு தவிடுபடக்
         குத்திய காங்கேய னேவினை யேற்கென் குறித்தனையே.


ஆங்காரமும் அடங் காரொடுங் கார்பர மாநந்தத்தே
   தேங்கார் நினைப்பு மறப்பு மறார்தினைப் போதளவும்
      ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே முருக னுருவங்கண்டு
         தூங்கார் தொழும்பு செய்யா ரென்செய் வார்யம தூதருக்கே

 

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
   வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
      காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
         சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே


போக்கும் வரவு மிரவும் பகலும் புறம்புமுள்ளும்
   வாக்கும் வடிவு முடிவுமில் லாதொன்று வந்துவந்து
      தாக்கு மநோலயந் தானே தருமெனைத் தன்வசத்தே
         ஆக்கு மறுமுக வாசொல் லொணாதிந்த ஆனந்தமே.   

 

படிக்கின் றிலைபழ நித்திரு நாமம் படிப்பவர்தாள்
   முடிக்கின் றிலைமுரு காவென் கிலைமுசி யாமலிட்டு
      மிடிக்கின் றிலைபர மாநந்த மேற்கொள விம்மிவிம்மி
         நடிக்கின் றிலைநெஞ்ச மேதஞ்ச மேது நமக்கினியே



கதிதனை யொன்றையுங் காண்கின்றி லேன்கந்த வேல்முருகா
   நதிதனை யன்னபொய் வாழ்விலன் பாய்நரம் பாற்பொதிந்த
      பொதிதனை யுங்கொண்டு திண்டாடு மாறெனைப் போதவிட்ட
         விதிதனை நொந்துநொந் திங்கேயென் றன்மனம் வேகின்றதே

 

ஓரவொட் டார் ஒன்றை உன்னவொட் டார் மல ரிட்டுனதாள்

சேரவொட் டார். ஐவர் செய்வதென்? யான்சென்று தேவருய்யச்

சோரநிட் டூரனைச் சூரனைக் காருடல் சோரிகக்கக்

கூரகட்டாரியிட் டோரிமைப் போதினிற் கொன்றவனே

 

குப்பாச வாழ்க்கையுட் கூத்தாடு மைவரிற் கொட்படைந்த

இப்பாச நெஞ்சனை யீடேற்று வாயிரு நான்குவெற்பும்

அப்பாதி யாழ்விழ மேருங் குலுங்கவிண் ணாருமுய்யச்

சப்பாணி கொட்டிய கையா றிரண்டுடைச் சண்முகனே.

  

முடியாப் பிறவிக் கடலிற் புகார்முழு துங்கெடுக்கு

மிடியாற் படியில் விதனப் படார்வெற்றி வேற்பெருமாள்

 அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்கப்

 பொடியாக் கியபெரு மாள்திரு நாமம் புகல்பவரே.

 

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த

கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு

தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்

தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.

 

தோலாற் சுவர்வைத்து நாலாறு காலிற் சுமத்தியிரு

 காலா லெழுப்பி வளைமுது கோட்டிக்கைந் நாற்றிநரம்

 பாலார்க்கை யிட்டுத் தசைகொண்டு மேய்ந்த அகம்பிரிந்தால்

 வேலாற் கிரிதொளைத் தோனிரு தாளன்றி வேறில்லையே.

  

செங்கேழ் அடுத்த சின வடி வேலும் திருமுகமும்

பங்கே நிரைத்த நல் பன்னிரு தோளும் பதும மலர்க்

கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரனென

எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே.

 

 

சிந்திக் கிலேனின்று சேவிக் கிலேன்றண்டைச் சிற்றடியை

வந்திக் கிலேனொன்றும் வாழ்த்து கிலேன்மயில் வாகனனைச்

சந்திக் கிலேன்பொய்யை நிந்திக்கி லேலுண்மை சாதிக்கிலேன்

 புந்திக் கிலேசமுங் காயக் கிலேசமும் போக்குதற்கே.

 

விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா

மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த

பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி

 வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.

 

 வேலே விளங்குகை யான்செய்ய தாளினில் வீழ்ந்திறைஞ்சி
 
மாலே கொள இங்கண் காண்பதல்லால் மன வாக்குச்செயலாலே
அடைதற் கரிதாய் அருவுருவாகி ஒன்று
 
போலே இருக்கும் பொருளை எவ்வாறு புகல்வதுவே.

 மூவிரு முகங்கள் போற்றி
      முகம் பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற
       ஈராறு தோள் போற்றி - காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள்
      மலரடி போற்றி - அன்னான்
சேவலும் மயிலும் போற்றி
      திருக்கைவேல் போற்றி போற்றி   (கந்த புராணம்)

 அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்

வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்

"குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும்
அன்றுஅங்கு அமரர் இடர் தீர்த்ததுவும் - இன்று என்னைக்
கைவிடா நின்றதுவும் கற்பொதும்பில் காத்ததுவும்
மெய்விடா வீரன்கை வேல்!"

"வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை." -

"உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்
கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா! செந்தில் வாழ்வே!"

"முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன்
மருகனே! ஈசன் மகனே! ஒருகை முகன்
தம்பியே! நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்."


"காக்க கடவியநீ காவாது இருந்தக்கால்
ஆர்க்குப் பரமாம் அறுமுகவா! - பூக்கும்
கடம்பா! முருகா! கதிர்வேலா! நல்ல
இடம்காண் இரங்காய் இனி!"

'உலகு குளிர எமது மதியில்
ஒழுகும் அமுத கிரணமே
உருகும் அடியர் இதயம் நெகிழ
உணர்வில் எழு நல் உதயமே
கலையும் நிறையும் அறிவு முதிர
முதிரு மதுர நறவமே
கழுவு துகளர் முழுக நெடிய
கருணை பெருகு சலதியே
அலகில் புவனம் முடியும் வெளியில்
அளியும் ஒளியின் நிலையமே
அறிவுள் அறிவை அறியும் அவரும்
அறிய அரிய பிரமமே
மலையின் மகள் கண்மணியை அனைய
மதலை வருக வருகவே
வளமை தழுவு பரிதி புரியின்
மருவு குமரன் வருகவே'

கழுவு துகளர்குற்றமற்றவர்
பருதிபுரிகதிரவன் வழிபட்ட இடம்(வைதீஸ்வரன் கோவில்

முத்துகுமாரஸ்வாமி பிள்ளைத் தமிழ்


பேராதரிக்கும் அடியவர் தம்
பிறப்பை ஒழித்து பெருவாழ்வும்
பேறும் கொடுக்க வரும் பிள்ளைப்
பெருமான் என்னும் பேராளா
சேரா நிருதர் குலகலகா
சேவற் கொடியாய் திருச்செந்தூர்த்
தேவா தேவர் சிறைமீட்ட
செல்வா என்று உன்திரு முகத்தைப்
பாரா மகிழ்ந்து முலைத் தாயர்
பரவிப் புகழ்ந்து விருப்புடன் அப்பா
வா வா என்று உன்னைப் போற்றப்
பரிந்து மகிழ்ந்து வரவழைத்தால்
வாரா திருக்க வழக்கு உண்டோ?
வடிவேல் முருகா வருகவே
வளரும் களபக் குரும்பை முலை
வள்ளிக் கணவா வருகவே.

திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ்



பாடாத நாவும் பணியாத சென்னியும் பாவித்து அன்பாய்
நாடாட உள்ளமும் நான் படைத்தால் நரகு ஏழும் சென்று
கூடா உயர் கதி கூடுவேனோ குன்று ஏறிந்த வைவேல்
சேடார் மதில் செந்திலாய் என்கொலோ நின் திருவருளே


திருசெந்தில் கலம்பகம்

மூவிரு முகங்கள் போற்றி, முகம்பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற ஈராறுதோள் போற்றி காஞ்சி
மாவடிவைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி, அன்னான்
சேவலும் மயிலும் போற்றி, திருக்கைவேல் போற்றி போற்றி.

அருவமும் உருவுமாகி அநாதியாய்ப் பலவா யொன்றாய்ப்
பிரம்மமாய் நின்ற சோதிப்பிழம்பதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்களாறும் கரங்கள் பன்னிரண்டுங்கொண்டே
ஒரு தின முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகமுய்ய

உசத்தசூரன் கிளையுடன் வேரற முனிவோனே
உகந்த பாசங் கயிறொடு தூதுவர் தனியாதே
அசந்த போதென் துயர்கெட மாமயில் வரவேணும்
அமைந்த வேலும் புயமிசை மேவிய பெருமாளே. (thirupugazh)

துய்யதோர் மறைகளாலும் துதித்திடற்கு அரிய செவ்வேள்
செய்ய பேரடிகள் வாழ்க! சேவலும் மயிலும் வாழ்க!
வெய்ய சூர் மார்பு கீண்ட வேல் படை வாழ்க! அன்னான்
பொய்யில் சீர் அடியார் வாழ்க! வாழ்க இப்புவனம் எல்லாம்.

ஆறிரு தடந்தோள் வாழ்க; அறுமுகம் வாழ்க;
வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க; குக்குடம் வாழ்க;
செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க; யானைதன் அணங்கு வாழ்க;
மாறிலா வள்ளி வாழ்க; வாழ்க சீர் அடியாரெல்லாம்!

 

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!  (திருப்புகழ்)

 

ஷடானனம் குங்கும ரக்த வர்ணம்
மஹாமதிம் திவ்ய மயூர வாஹனம்
ருத்ரஸ்ய ஸுனும் ஸுரஸைன்ய நாதம்
குஹாம் சதாஹம் சரணம் ப்ரபத்யே

 

ஷடானனம் - ஆறுமுகங்களை உடையவன்
குங்கும ரக்த வர்ணம் - குங்குமத்தைப் போல் மிகச் சிவந்த நிறம் கொண்டவன்; சேயோன்; சேந்தன்
மஹாமதிம் - பேரறிஞன்
திவ்ய மயூர வாஹனம் - தெய்வீகமான மயிலை வாகனமாகக் கொண்டவன்
ருத்ரஸ்ய ஸுனும் - உருத்திரனின் திருமகன்
ஸுரஸைன்ய நாதம் - தேவர் படைகளின் தலைவன்
குஹாம் - குகையில் வாழ்பவன்
சதா அஹம் சரணம் ப்ரபத்யே - (அவனை) எப்போதும் நான் கதியென அடைகிறேன்!
குருகுஹனைத் தியானிக்க ஒரு அருமையான சுலோகம்! எளிமையானதும் கூட!

 

 

 

 


No comments:

Post a Comment