Monday, April 11, 2016

குத்ஸ கோத்திரம்


நம் குத்ஸ கோத்திரம்

ப்ரம்மாவின் ஒரு நாள் என்பது ஒரு கல்பம்.
14 மன்வந்திரங்கள் கொண்டது ஒரு கல்பம்.
ஒரு  மன்வந்திரம் என்பது 71 மஹா யுகங்கள் கொண்டது
ஒவ்வொரு மன்வந்திரத்தின் முடிவிலும் ஒரு 17,28,000 வருடங்கள் சந்திகாலம் என்று சொல்லப்படும்
இந்த காலத்தில்  உலகம் நீரில் மூழ்கி இருக்கும்.
ஆக ஒரு கல்பம் என்பது  14 x 71 + 15 சந்தி காலங்கள்.  ஆக ஒரு கல்பம் என்பது மொத்தம் 1000 மஹாயுகம் (நம் கணக்கில் 432,00,00,000 ஸூர்ய வருடங்கள்) 4.32 பில்லியன் வருடங்கள்.
ஒரு மகாயுகத்தில் 4 யுகங்கள் அடக்கம். சத்ய யுகம், திரேதா யுகம், த்வாபர யுகம், கலி யுகம்
என்பது இந்த 4 யுகங்கள்.  இந்த நாலு யுகங்கள்  ஒரு சுழற்ச்சி என்று கொண்டால், இது போல 1000 சுழற்ச்சிகள் கொண்டது ஒரு கல்பம்
ஒவ்வொரு மன்வந்தரத்திற்கும் ஒரு மனு உண்டு. ஒரு சப்தரிஷி கூட்டமும். உண்டு

நம்முடைய காலம் ஸ்வேத வராஹ கல்பம் என்றும், அதில் 14இல், ஏழாவது மன்வந்திரமான வைவஸ்வத மன்வந்திரத்தில் நாம் இப்போது இருக்கிறோம் என்று சொல்லப்படுகிறது.
அத்ரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கௌதமர், காஸ்யபர், ஆங்கீரசர் என்பவர்கள் இந்த மன்வந்தர சப்த ரிஷிகள் என்று சொல்லப்படுகின்றனர். இதில் நமது கோத்திரம் குத்ஸ கோத்திரம். அதாவது நாம் குத்ஸர்
வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.
குத்ஸ மஹரிஷி சப்த ரிஷிகளில் ஒருவர்.
.குத்ஸர் ருரு என்கிற ஒரு ராஜரிஷியின் புதல்வர். இந்த்ரன், ருரு அரசனாக இருந்த்போது அவருக்கு உதவியாக இருந்து அவரது பகைவர்களை அழிக்க உதவினான் என்றும் அதன் பின் இந்திரனும் ருருவின் மகன் குத்ஸரும் நண்பர்கள் ஆனார்கள் என்றும்  இந்த்ரன் இவரை தன் இந்திரலோகத்திற்கே
அழைத்துச்சென்று ருருவின் வெற்றியைக் கொண்டாடினான் என்றும் சொல்லப்படுகிறது.  ரிக் வேதத்தில் பல இடங்களில் இவர் பேசப்படுகிறார். இந்திரனுடைய நண்பர். மட்டும் அல்ல. அவரைப் போன்றே இருப்பவர் என்றும் சொல்லப்படுகிறது. இந்திராணியே இருவருக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பியதாகவும் சொல்லப்படுகிறது. அவ்வளவு அழகானவர். இனிமையானவர்.
ஒரு ரிக்வேத மந்திரம் இவரை அர்ஜுனன் மகன் என்ற பொருளில் அர்ஜுனேயன் என்று அழைக்கிறது.
ரிஷி ஆங்கிரசின் வம்சத்தைச் சேர்ந்தவர் என்றும் சொல்லப்படுகிறது.
ஸ்ரீ ருத்ரத்தில் உள்ள மொத்தம் 82 சூக்தங்களில் 65 சூக்தங்கள் குத்ஸர் உணர்த்தியதாக சொல்லப்படுகிறது.
வான்வெளி மண்டலங்களில் உள்ள கோள்கள், கிரகங்கள் பற்றிய விதிகளையும் இவரே ஆய்ந்து அறிந்ததாக சொல்லப்படுகிறது.
ரகுவம்ச காவியத்தை எழுதிய காளிதாசன் ரகு வம்சத்தை ஆசீர்வதித்த குத்ஸரை வணங்கி போற்றுகிறார்.
ஆக இவ்வளவு சிறப்புகள் கொண்டது நம்முடைய கோத்திரம்.

No comments:

Post a Comment