Friday, November 8, 2024

 


தனித்துணை – எய்ப்பினில் வைப்பு – FIXED DEPOSIT

 

                            நீத்தல் விண்ணப்பம்  - திருவாசகம்

 

பாடல் விளக்கம்

 

ஈடு இணை இல்லா தனித் துணை நீ இருக்க, நான் கர்வம் கொண்டு தலைக்கனமாக  நடந்தேன். வினையில்  விழுந்தேன். இந்த பாவியை விட்டுவிடாதே அப்பா.  இந்த வினைகேடன் பெற்ற மனத் துணையே

என் வாழ்வின் காரணமாகியவனே, என் முதுமைக்கு சேர்த்துவைத்த

பொருட் செல்வம் போன்றவனே,

என்னால் கொஞ்சம் கூட பொறுத்துக் கொள்ள முடியவில்லை அய்யா இந்த துன்பம் நிறந்த பிறவி வலைத் துயரை.  (ஆதாலால் என்னை கைவிடாதே)

 

மேல் விளக்கம்

 

மனிதனுக்கு பல துணைகள் உண்டு

தாய்-தந்தை  – ஆமாம். ஆனால் அவர்கள் காலத்தால் பிரிக்கப் படுகிரார்கள்

நண்பர் – தூரத்தாலோ அல்லது கொடுக்கல் வாங்கல் சிக்கல்களாலோ பிரிக்கப்படுகிறார்கள்

ஆனால் இறைவன் அப்படி இல்லை. தனிப்பெரும் துணை. சரிதானே

அருகில் இல்லையே என்று சொல்லலாமா?  தவறு.  இறைவன் சொர்கத்தில் வெளிப்பட்டும் நரகத்தில் மறைந்து இருந்தும் அருள் செய்கிறான்.  பொன்னும் பொருளும் போகமும் திருவும் நம்மோடு சேர்த்து வைக்கிறான். ஆதலால் தனித்துணை.

 

தலை நிறைய மூளை இருக்கிறது. ஆனால் அதில் இருப்பது அறிவா அறியாமையா? போகப்போகத்தான் தெரிகிறது.  கர்வம் தலையைத் தாண்டி நிற்கிறது.  அதனால் அவன் தலையால் நடக்கிறான். காரைக்கால் அம்மயார் நடந்தது மாதிரி அல்ல இது. அது பணிவின் முதிர்வு.  இது கர்வத்தின் வெளிப்பாடு.  இது  இறைவன் குரலைக் கேட்பதில்லை. கேட்டாலும் பணியாது. விளைவு?  வினை.  தீவினை. தனித்துணை மறந்து தீவினையை துணை என கொள்கிறது.

இந்த வினையைச் செய்யாமல் இருக்க முடியாது. வினை செய்தலே வாழ்க்கை. தண்ணிரால் உடல் கழுவுதலும் அவசியம். அந்த தண்ணீரைத் துடைத்தலும் அவசியம்

எனவே இந்த வினை செய்தலை ஒரு தவம் போல் நோன்பு போல செய்யவேண்டும்.பிறர்க்கு பயன்படுமாறு செய்வதே நோன்பு அல்ல்து தொண்டு.  நாம் இந்த உலகில் வாழ்வத்ற்கு நாம் தரும் வாடகை தான் தொண்டு.  ஆகவே வினை செய்க.  உலகம் பலன் பெறும்படி செய்க.

உயிர் மனத்தின் வழியே தான் எண்ணுகிறது. வாழ்க்கையின் முதலும் முடிவுமாகிய கருத்தை உருவாக்குவது மனம் தான். அந்த மனத்தின் துணை இறைவன்.  நம் மனத்திற்கு உற்ற துணை அவனே.  அந்த மனத்துணையாகிய இறைவன் குரலே மனசாட்சி. அதன்படி நடத்தல் வேண்டும்.

அப்படி நடக்கவில்லையானல், மனம் அலைச்சல் உற்று இரைச்சல் இடுகிறது

களைத்து போகிறது. அப்படியும் இறைவன்  நம்மைக் கை விடுவதில்லை.

முதிர்வு(ஓய்வு)கால  வைப்புத் தொகையாக வங்கியில் வைத்த பிக்சட் டெபாசிட் போலே உதவுகிறான் இறைவன். ஆனால் பண உதவி கிடைக்க நாம் வங்கிக்க்கு செல்வதுபோலே இந்த இறை தரும் கொடையை பெற நாம் அவன் கால்களில் சரண அடைதல் வேண்டும்

 

இல்லையானால் இந்த பிறவித்துயர் என்னும் வலையில் இருந்து மீளமுடியாமல் போகும்

 

- குன்றக்குடி அடிகளார் விரிவுரையை ஒட்டி எழுதியது


No comments:

Post a Comment