இறைவனை எதை காட்டி அவன்
இப்படி இருப்பான் என்று சொல்லுவது ?
இப்படி எதை காட்டியும் சுட்ட
முடியாமல் இருப்பதைத் தான் "சுட்டறுத்தல்" என்று சொல்லுவார்கள்.
இறைவன் நீங்கள் அறிந்த எது மாதிரியும் இருக்க
மாட்டான்....அவனுக்கு உதாரணம் சொல்ல முடியாது...
சுட்டறுத்தல் என்ற தலைப்பின் கீழ் மாணிக்க வாசகர் அருளிய ஒரு பாடல்
“வெள்ளம்தாழ் விரிசடையாய், (கங்காதரா)
விடையாய், (விருஷபாரூடா)
விண்ணோர்
பெருமானே (தேவ
தேவா)
வேட்ட நெஞ்சாய்ப்
பள்ளம்தாழ் உ றுபுனலில் கீழ்மேலாகப்
பதைத்து
உருகும் அவர் நிற்க
என்னை ஆண்டாய்க்கு
உள்ளம் தாள்நின்று உச்சி அளவும் நெஞ்சாய்
உருகாதால்,
உடம்பு எல்லாம் கண்ணாய்
வெள்ளம்தான் பாயாதால் நெஞ்சம் கல்லாம்
கண்இணையும்
மரமாம் தீ
வினையினேற்கே”
பரம
பக்தர்கள் பலர், சிவபெருமானை
“கங்காதரா, ஜடாதரா, ரிஷபாரூடா,தேவதேவா என்றெல்லாம் கூப்பிட்டு, (உன்மேல் உள்ள பக்தி ஆர்வம் காரணமாக),
மேட்டிலிருந்து
பள்ளத்திற்குப் பாய்ந்து வருகிற தண்ணீரில்,
(கீழ்மேலாக)
கால் மேலேயும் தலை கீழேயும் இருக்கும்படி, தண்ணீரில் குப்புறப் பாய்ந்து
(DIVE)
தலைகீழாக மாட்டிக்கொண்டது போல இந்த உலக வாழ்க்கையில் உழல்வதை
எண்ணித் தவிக்கிறார்கள். நான் என் உள்ளத்தை
உன் திருவடியில்
சமர்ப்பிக்கவில்லை. என் தலையளவுக்கு நெஞ்சம்
விரித்து
உருகவில்லை.என் உடல் முழுவதும்
கண்களாக்கிக் கண்ணீர்
சிந்தவில்லை. என் மனம் கல்
போலவும் கண்கள் மரம் போலவும்
காய்ந்திருக்கின்றன.இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொண்டாயே என
மாணிக்க வாசகர் வியக்கிறார்.
தீவினை உடைய தம் மீதே
சிவன் கருணை காட்டினால், அல்லும்பகலும்
அவன் நாமங்களை ஜெபிக்கின்ற பக்தர்களுக்கு எவ்வளவு அருள்
கிடைக்கும்? அந்தப் பேரருள் பெறத்தான் ஆசைப்படுகிறார் மாணிக்கவாசகர்!
No comments:
Post a Comment