தமிழ் அனுபவிப்போம்.....3
இதோ ஒரு சில அற்புத்த் தமிழ் பாடல்கள் - கடவுளிடம் எதைக் கேட்பது - எப்படி வண்ங்குவது - என்பது பற்றியது; ( இவைகள் மிகவும் பிரபலமான பாடல்கள் தாம். அனேக பல்சுவை வாசகர்களுக்கு இவை அரிசுவடி பாடல்களாகவும் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஆயினும், 'தமிழ் அனுபவிப்போம்' தலைப்பில் இவைகளைச் சொல்லாமல் இருக்க் முடியவில்லை. கூறியது கூறல் குற்றம் பொறுத்தருள்க.
வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மால்க்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணி கொண்டாய்
வேண்டி நீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில் அதுவும்
உந்தன் விருப்பு அன்றே.
அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் என்னை ஆட்கொண்டபோதே கொண்டிலையோ
இன்றோர் இடையூறு எனக்குண்டோ எண்டோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே
நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து நான் நடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புனக்கென்
ஊடகத்தே நின்றுருகத்தந்தருள் எம் உடையானே.
உடையாள் உன்றன் நடுவிருக்கும் உடையாள் நடுவில் நீ இருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதனால் அடியேனுன்
அடியார் நடுவுள் இருக்கும் அருளைப்புரியாய் பொன்னம்பலத்தெம்
முடியா முதலே என் கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே.
----------மாணிக்கவாசகர் - திருவாசகம்

Excellent! Thank you, sir.
ReplyDelete