தமிழ் அனுபவிப்போம் ..1
I had recently purchased a book called “??????????????' written by
“?????”. It It is neither verse nor dialogue. It is a combo. It is
called வசன கவிதை.
I give below some excerpts from that book. (english words in brackets
given by me as explanation to enjoy the pun)
This is the first part. If you like it, I will send a second part and
continue like that with selections from that book.
You will realize how good Tamil is and how good the author handles it
===================================================
நானொரு தட்டெழுத்து இயந்திரம்
இதை தட்டித்தட்டி தமிழ் வடிப்பது அந்த எட்டெழுத்து மந்திரம் (ஓம் நமோ
நாராயணாய)
கர்த்தா அவன். கருவி நான்
என்னைக் கையாளாய் அவன் கையாளுகிறான் (handyman)
இந்த எழுத்துக்கள் எடுத்துக் காட்டுவது அரிமுகம் ( face of Hari)
எதற்கு அதற்க்கோர் அறிமுகம்? ( intro)
இறைவா நீ அனைத்திற்கும் மூலம்
ஆதலால் உனக்கே முதல் தாம்பூலம்.
எல்லா வாக்குகளுக்கும் உன் வாக்குதான் மூலம்
இது வேதம் தந்த வாக்குமூலம் (declaration of Vedas)
நேர்வது எல்லாம் நின்னருள் மூலம். (through your grace) நின் அருள்
இல்லயேல் நிர்மூலம் (waste)
அரிதார புருஷர்களை (make up - actors) நான் அர்சித்து அலுத்து
ஓர் அவதார புர்ஷனை ( Rama Avataar) ஆராதிக்க வருகிறேன்
ஒப்பனை முகங்களை (make up faces) ஒப்புக்கும் (just like that)
உப்புக்கும் (for livelihood) பாடியவன்
அந்த த்ப்புக்குப் பிராயசித்தமாய் ஓர் ஒப்பிலா முகத்தை தப்பிலாத் தமிழில்
பாட வருகிறேன்
காமன் கதை எழுதிக் காயங்கள் பெற்றவன் இன்று ராமன் கதை எழுதி ரணங்களை
ஆற்றுகிறேன்
வா இறைவா வந்து உதவு. உன் அருள் பெற்றபின் ஒரு வீணையாகட்டும் இந்த விறகு.
( let this body become useful)
தமிழ் அனுபவிப்போம் ..2
=========================
'தமிழ் அனுபவிப்போம்' என்ற நானே எடுத்துக்கொண்ட தலைப்பின் கீழ் நான்
துவங்கிய 'வலை உரையாடல்' சிலரைக் கவர்ந்தது. சிலருக்கு உவர்ந்தது.
நான் எழுதியது: " அவதார புருஷன்" இலிருந்து வாலி அவர்கள் எழுதிய 'நூல்
அறிமுகம்' பகுதியிலிருந்து சில வரிக்ள்.
நூல் தலைப்பையும் ஆசிரியரையும் சிறிது காலம் கழித்து தெரிவிக்கலாம் என்று
இருந்தேன். வாசக அன்பர்களின் பதில் உரைகள் அதற்கு இடம் அளிக்கவில்லை.
கண்ணன் என்பவர் "அப்பனைப் பாடும் வாயால் ஆண்டி சுப்பைனைப் பாடலாமோ" என்ற
விதமாக சாகா வரம் பெற்ற கவிதை/வசன கவிதைகளைக் கூறாமல், ஒரு சாதாரண
கவிதையை தலையில் வைத்துக் கொண்டாடுகிறாயே என்ற விதமாக பதில் உரை
எழுதியிருந்தார்.
மேற்கோள் துவக்கம்:
எத்தனை உண்டு தமிழில் படிக்க இலக்கியங்கள்
திருக்குறள், திருவாசகம், தென்மதுரைச் சிலம்பு
திவ்ய ப்ரபந்தம், பெரிய புராணம்
கம்பன் காவியம், பாரதி கவிதைகள்
இத்தனையும் இருக்க இந்த சிறு மதியோனை (அதாவது நூல் ஆசிரிய்ர் அவர்களை)
தலையில் வைத்து கூத்தாடும் தமிழா..
உனக்கு என் அனுதாபங்கள்
மேற்கோள் முடிவு
என்று எழுதியிருந்தார்
ஆஹா அதற்கு என்ன தடை? அனைவரையும் அனுபவிப்போம். வாலி எழுத்தையும்
அனுபவிப்போம். மற்றவர்களையும் அனுபவிப்போம். யாரையும்
தனிப்பட்டமுறையில் விமர்சிக்க வேண்டாமே?
ஒரு குழந்தையைப் பார்க்க ஒருவர் அதன் வீட்டிற்க்கு ஒரு அழகிய விலை
உயர்ந்த பொம்மையைப் பரிசுப்பொருளாக எடுத்துச் சென்றார். குழந்தை ஹாலில்
கவிழ்ந்து விளையாடிக்கொண்டிருந்தது. அதே நேரத்தில் அந்த வீட்டு
வேலைக்காரியும் அங்கு சென்றாள். அவள் கையில் ஒரு சிறிய மரப்பாச்சி
பொம்மை இருந்தது. குழந்தைக்காக தன் வீட்டிலிருந்து கொண்டுவந்திருப்பாள்
போலும். அவள் அந்த மரப்பாச்சியை குழந்தைக்கு அருகில் வைத்துவிட்டு உள்ளே
சென்றுவிட்டாள். வந்தவ்ரும் தான் கொண்டுவந்த பொம்மையை குழந்தை முன்பாக
வைதார்.
குழந்தையை மரப்பாச்சி அதியம் கவர்ந்தது. அந்த விலை உயர்ந்த பொம்மையை அது
சட்டை செய்யவே இல்லை. மரப்பாச்சியுடன் ஆசை தீர விளையாட ஆரம்பித்தது.
வந்தவர் தன் பொம்மையை எடுத்துக் குழந்தை அருகில் மீண்டும் மீண்டும்
கொண்டு சென்று அதை கவர முயன்றார். ஆனால் குழந்தை அவரை சட்டை
செய்யவில்லை. அவர் கொண்டுவந்த பொம்மையையும் சட்டை செய்யவில்லை.
இந்த குழ்ந்தை போன்ற நிலை தான் என் நிலையும். என் போன்ற மற்றவர்
நிலையும்.
வாலியை எடுதுக்கொண்டது எதேச்சையாகத்தானே தவிர அவரையே தனிப்பெரும்
கவிஞனாக நிலை நிறுத்த அல்ல.
அவரே அவையடக்கமாக கீழ்கண்டவாறு கூறுகிறார்
மேற்கோள் துவக்கம்:
நான் நான்கு அங்குலம் நகர்ந்து வந்ததையே
நகர் வலமாய் நினைக்கும் நத்தை
(நான்) வான்மீகி வாலையும் கம்பனின் காலையும் வருடிப் பார்த்தே
ஆன்மீக இலக்கணம் அத்துப்படியானதாய் அறிவிக்கும் அசடன்,
கம்பனே அறிவில் பெரியோனே
பாரிஜாத பூவிற்க்கு ஒரு
காகிதப்பூவின் கை கூப்பு
கவிசக்கரவர்த்தியே
நீ மரபில் பா??யதை
நான் புதிதில் பாடுகிறேன்
நீச்சல் தெரியாமல்
நீருள் இறங்கிவிட்டேன்
கூச்சல் போடுவேன்
காப்பாற்று
மேற்கோள் முடிவு
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்போருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.
மீண்டும் சொல்கிறேன்.
வாதம் என் வழியல்ல.
எனக்கு இது பிடித்தது. உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்பினேன்.
அதனால் எழுதினேன்.
.............
பிடித்தது - பிடிக்காதது என்று சொல்லும்போது, இது நினைவுக்கு வருகிறது.
(இராவணன் சீதையை சிறை எடுத்து, அவளிடம் கூறும் விதமாக..)
உன்னைப் பிடித்ததால் தான்
பிடித்து வந்தேன்
பிடித்து வந்ததால்தான்
என்மேல்
பிடித்தமில்லையோ?
பிடித்தபிடி விடாத என்
பிடிவாத குனம் - நீ
பிடிபட்ட பிறகும் - உனக்குப்
பிடிபடவில்லையோ?

No comments:
Post a Comment