Tuesday, May 5, 2009

சிறு கதை - வேலை

வேலை

"என்ன குமரேசா என்ன விஷயம்? என்ன திடீர் என்று இந்தப் பக்கம்? ஏதாவது முக்கியமான விஷயமா? பணம் ஏதாவது தேவையா" எதுவா இருந்தாலும் தயங்காமல் சொல்லுடா" கணபதிராம் கேடடார்.

"அதெல்லாம் இல்லை ஐயா." என்று இழுத்தான் குமரேசன்

'சொல்லுடா. நான் ஒன்றும் தப்பாக் நினைத்துக்கொள்ளமாட்டேன். தயங்காம் சொல்லு"

"அது வந்து, தப்பா நினைச்சிடாதீங்க ஐயா. நான் வேலையிலிருந்து நின்னுடலாம்னு நினைக்கிறேன். அது தான் சொல்லிட்டு போகலாம்னு...வந்தேன்"

கணபதிராமுக்கு ஒன்றும் புரியவில்லை, என்ன திடீரென்று இவன் இப்படிச்சொல்கிறான்?

"என்னடா ஆச்சு உனக்கு? ஏன் திடீரெனறு இப்படிச் சொல்கிறாய்? நம்ம ஆபீசில் எதாவது தகராறா? விவரமாச் சொல்லுடா"

"ஆபீஸ்லே ஒன்னும் தவறா நடக்கலை ஐயா. அது தான் நிறைய பேர் இருக்காங்களே. நான் என்ன சொன்னாலும் சட்டுனு செஞ்சுடறாங்க"

"அப்ப என்னடா ஆச்சு? திடீர்னு நிக்கறேன்னு சொன்னா என்ன அர்த்தம்?"

"இல்ல ஐயா. ஒரு மாசமாவே இதைப் பத்தி நினச்சு நின்ச்சு இப்பதான் ஒரு முடிவுக்கு வந்தேங்க. உங்ககிட்டே சேர்ந்து 35 வருஷமாச்சு. நானும் நல்லா உழைச்சேன். நீங்களும் என்னை நல்லா கவனிச்சிக்கிட்டீங்க. இது போதும் என்று தோணிச்சு. அதுதான். நின்னுக்கிடலாம்னு முடிவுக்கு வந்தேன்"

கண்பதிராமுக்கு என்ன் சொல்வது என்று தெரியவில்லை.

'சரிடா. நாளைக்கு காலைல இங்க வா. என் முடிவைச் சொல்றேன்" என்று சொல்லி அவனை அனுப்பிவைத்தார் கணபதிராம்.

கணபதிராம் ஒரு பெரிய கட்டிட்க்கலை வல்லுனர். அவர் கீழ் அனேக கட்டிடக் கலைஞர்கள் வேலை செய்தார்கள். அவர் கீழ் பணி ஆற்றிய அனைவரையும் அவர் மிகுந்த மரியாதையுடனும் தகுந்த ஊதியத்துடனும் வைத்துக்கொண்டிருந்தார். ஆதலால் அவருக்கு கட்டிட்ம் கட்டும வாய்ப்புக்கள் வந்த வண்ணம் இருந்தன. தனது கீழ் இருக்கும் ஊழியர்களை அவர் அடிக்கடி ஊக்கப்படுத்தியும் உற்சாகப்படுத்தியும் வந்ததால், அவரால் தனக்குக் கிடைத்த எல்லா கட்டிட்ப் பொறுப்புக்களையும் குறித்த நேரத்தில் முடித்துக் கொடுக்க முடிந்தது. குமரேசன் அவரது பணியாளர்களில் முக்கிய பொறுப்புள்ளவனாக இருந்தான்

குமரேசன் சுமார் 35 வருடங்களாக அவரிடம் இருப்பவன். அவனை கணபதிராம் தனது வலது கையாகவே கருதினார். அதே போல், குமரேசனும் கணபதிராமுக்கு உன்மையாகவே உழைத்தான். நேரம் காலம் பார்க்காமல் வெய்யில் மழை பார்க்காமல் ஒவ்வொரு கட்டிடத்தையும் தன் கட்டிடம் போல் எண்ணி குறித்த நேரத்தில் முடித்துக் கொடுத்தான். குமரேசன் இருந்தால், கணபதிராம் அந்த இடத்திற்க்கு வரவே வேண்டாம். திட்டமிடுதல், வரை படம், ஒப்புதல் வாங்குதல் போன்ற்வைகளை மட்டும் அவர் பார்த்துக்கொள்வார். மற்ற விஷயங்களை முழுமையாக குமரேசனிட்ம் விட்டுவிட்டார். அவனுக்கு பக்க பலமாக் நல்ல ஆட்களை வேலைக்கு அமர்த்தினார். கம்பனி நன்றாக் நடந்தது.

கணபதிராமுக்கு உடல் நலம் குறைந்ததிலிருந்து, குமரேசனுக்கு இன்னும் பொறுப்புகள் அதிகமாயிற்று, செங்கல், மணல் ஜல்லி, சிமெண்ட் முதல் மரம், பெயிண்ட், டைல்ஸ், சிங்க், வாஷ் பேசின் வரை அவனே பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்து, ஆர்டர் செய்து, பொருத்தி, கஸ்டமருக்கு பில் கொடுத்து, அவர்களிடமிருந்து பணம் வாங்கி, மேஸ்திரி-சித்தாள் வாரக்கூலி கொடுத்து சகல் காரியங்களும அவன் மேற்பார்வையிலேயே நடந்தன. குமரேசன் கை வைத்த வீடுகள் அனைத்தும் தரத்தில் மிக்ச்சிறப்பாக இருந்தன். ஒவ்வொரு நாளும் வீடு வருவதற்குள் இரவு 10-11 மணி ஆகிவிடும். பின்னர் காலை 7மணிக்கே மீண்டும் வேலைக்குக் கிளம்பவேண்டியிருக்கும். பல கஸ்டம்ர்கள், பல சமயங்களில், கணபதிராம் முன்பாகவே, குமரேசனைத்தான தான் முதலாளி என்று நினைத்துப் பேசினார்கள். கணபதிராமும் இதில் குறுக்கிடவே இல்லை. முதலாளியின் அன்பு கவனிப்பிற்க்குக் குறை இல்லை. வண்டி, ஓவர்டைம், லீவு சம்பளம் எல்லாம் கிடைத்தன.

ஆனாலும் குமரேசனுக்கு வெறுத்துப்போயிற்று. கையில் கொஞ்சம் சேமிப்பு உள்ளது. குடும்பமும் சிறியது. ஆகவே, இந்த ஒட்டம் போதும் என்றும் இந்த 30-35 வருடமாக் உழைத்ததே மேல் என்று அவனுக்கு தோன்றியது, முதலாளியும் நாளை காலை வரச் சொல்லியிருக்கிறார். என்ன சொல்ல்ப்போகிறார் என்று தெரியவில்லை. என்ன சொன்னாலும், முடியாது என்று கண்டிப்பாக்ச் சொல்லிவிடவேண்டும் என்று நினைத்தான்.

மறு நாள் சீக்கிரமாகவே எழுந்து அவர் வீட்டிற்க்குச் சென்றான். கணபதிராம் வந்தார். அவர் முகம் சற்று வாடியிருந்த்து. குமரேசன் பிரிவு அவரை வருத்தியது போல் இருந்த்து. அவர் கையில் ஒரு கட்டிட வரை படம் இருந்த்து. அதை அவனிடம் நீட்டினார். குமரேசன் வாங்கிகொண்டான்.

“குமரேசா, உன்னை பிரியறது எனக்கு ரொம்ப கஷ்டம் தாண்டா. ஆனாலும் இவ்வளவு வருஷத்திற்கு அப்புறம் உன்னை தடுக்கிறது நியாயம் இல்லே. ஆனா உன்னை ஒன்னு கேட்டுக்கிறேன். இப்ப கொடுத்தேனே இந்த வீட்டு ப்ளான் பாரு. இதை ரொம்ப நாளா அப்ரூவல் வாங்கி வச்சிருக்கேன். இதை மட்டும் நீயே நின்னு எனக்கு நல்லா சூப்பரா கட்டி தந்திட்டு அப்புறம் நீ நின்னுக்கோ. இதை நீ தான் நின்னு செய்யணும் என்ன? இதை முடிக்க ஒரு 6 மாசம் ஆகும். அவ்வள்வுதான். இப்பவே நிக்கறதுக்கு பதிலா, ஒரு ஆறு மாசம் கழிச்சு நிக்கறே. என்ன?” என்று கணபதிராம் அவன் முகத்தைப் பார்த்தார்.

குமரேசனால மறுக்க முடியவில்லை. முதலாளி கொடுத்த புதிய வீடு கட்ட்ட் வேலை துவங்கினான். மற்ற வேலைகளையெல்லாம் மற்றவர்களிடம் பகிர்ந்து கொடுத்தான். ஆனால் மனது இந்த வேலையில் ஒன்றவேயில்லை. கட்டிட சாமானங்கள் ஆர்டர் செய்தான். சரக்கு வந்து சேர்ந்த்து. பார்த்து பார்த்து கட்டிட பொருட்கள் வாங்கி பழக்கப்பட்டவனுக்கு இப்பொது வந்த பொருட்கள் தரம் மிகவும் குறைந்தவையாக இருந்தன. மரம் சரியில்லை. சிமென்ட் கொஞ்சம் கட்டை தட்டி இருந்த்து. செங்கல் ஒரே இரசல் கல்லாக இருந்த்து. விரலால் சுண்டினால் டங்க் டங்க் என்று உலோகம் போல் சத்தம் கேட்கவில்லை. ஸ்பெஷல் தரை டைல்ஸ் ஆர்ட்ர் செய்தான். சாதா டைல்ஸ் வந்த்து. இரும்பு கம்பி மூன்றாம் தரமாக இருந்த்து. ரெடிமேட் கதவு சன்னல்கள். கிரில்கள் த்ருப்தியாக இல்லை. இவை எல்லாவற்றையும் திருப்பி அனுப்பி புதிய சரக்கு வருவிப்பதெனறால் இன்னும் நாட்களாகும்.. மழை வேறு அடிக்கடி வந்து தொல்லை தந்த்து. இருப்பது போதும். வேலையை முடித்து விடுவோம். என்று வேலை செய்தான்.

வீடு ஒருவழியாக கட்டி முடிந்த்து. ஆனால் திருப்திகரமாக அமையவில்லை. குளியல் அறையில் தண்ணீர் தேங்கி நின்றது. சமையல் அறை சிங்க் சரியாக பதிக்கபடவில்லை. மேடையை அலம்பினால் தண்ணீர் சிங்க்குக்கு செல்லாமல் த்ரையில் விழுந்த்து. எந்த கதவையும் சரியாக்ச் சார்த்த முடியவில்லை. ஜன்னல்களும் அப்படியே. எல்லா அறை சீலிங்கிலும் தண்ணீர் முத்துகள் தெரிந்தன. இரும்பு கிரில் பொருத்தியதில் கொஞ்சம் சாய்வு இருந்த்து. சுவர் சிமென்ட் பூச்சு சமச்சீராக இல்லை. கிணற்று மோட்டார் எவ்வளவு ஓடினாலும் தண்ணீர் சரியாக எடுக்கவில்லை. எல்லாமே மூன்றாம் தரம். சுவிட்ச்கள் ஷாக் அடித்த்து.

இது போதும் என்று நினைத்தான் குமரேசன். புது வீட்டை பூட்டி சாவியைக் கையில் எடுத்துக்கொண்டு முதலாளி வீட்டிற்க்குச் சென்று புது வீட்டுச் சாவியைக் கொடுத்தான். “நீங்க சொன்னபடி அந்த புது வீட்டு வேலையை முடிசிட்டேங்க” என்று சொல்லி முதலாளியைப் வீடு பார்க்க வரச்சொன்னான். கணபதிராம் காரில் வந்து இறங்கினார். வீட்டுச்சாவியை குமரேசனிடம் தந்தார்.

“குமரேசா, என் கிட்டே 35 வருஷமா உண்மையா வேலை செயதே. உனக்கு என்ன கொடுக்கிறதுன்னு யோசிச்சேன். இந்த வீடு நான் உனக்கு தந்த பரிசா இருக்கட்டும்டா. இனிமேல் இது உன் வீடுடா. இந்தாடா இந்த் புது வீட்டுச்சாவியை பிடி. சந்தோஷமா இரு” என்று சொல்லி விட்டு காரில் ஏறினார்.

-------0000--------

கரு: இணைய தளம்

No comments:

Post a Comment