தமிழ் அனுபவிப்போம்
திவ்ய தேசங்களில் திருவரங்கம் த்னி
அது நூற்றெடடின் நுனி ( 108 divya desangal)
ஆறு இரண்டாகி (cauvery and Kollidam)
சுற்றுகள் ஏழுக்குள் இருக்கும் எட்டை( seven prakaarams - 8 = om namo
narayanaya)
வலம் வரும் தலம்.
வைகுந்தம் நிலம் இறங்கிய நிலம்.
இராவணன் இளவல் (vibeeshanan) ஆளும் தீவு (sri lanka) பார்த்து
தேவு படுத்திருக்கும் தீவு.
'அரவு மேல் படுத்திருக்கும் இரவு' எனப் பேசும்படி
பெரிய பெருமாள் - கரிய பெருமாள்
ஆயினும் அருள் வெளிசத்தை அவ் விரவு தான் பிலிற்றி
எல்லோர் இரவையும் விடிய வைக்கிறது
திருவிருத்தமும் திருவாசிரியமும் பெரிய திருவந்தாதியும் திருவாய்மொழியும்
பைந்தமிழால் பாடியருளிய பராங்குசனை அல்லால்
வகுளம்பூ விரும்பிச்சூடிய வகுளாபரணனையல்லால்
சடமெனும் வாயுவை முனிந்த சடகோபனை அல்லால்
குருவாய் நின்று கடாட்சித்த குருகூர் நம்பியை அல்லால்
பிரிதொரு தேவைப் பாடியறியாத காரி மாறனின் அடியார்
மதுரகவியின் ஒரு நா தவிர மற்ற(வை) ஓராறும் ஐந்தும் பாட*****
பையுடைய இருநாமீது (aadiseshan)
ஒருக்களித்துக்கிடக்கும் ஓரெட்டெழுத்தானை
இராக்கதன் செருக்கழுத்திக் கோறி இலங்கை சின்னவனுக்கீந்தானை
தெற்கிலும் வட்க்கிலும் தெண்ணீர்ப் பொன்னி
தரங்கம் எழுப்பித் தரையலம்பும் திரு அரங்கம் எனும் ஊரானை
அரங்கனாதன் என்னும் பேரானைக்
காண கண் இரண்டும் போதா;
அவை உள்ள வனப்பை உள்ளபடி நமக்கு ஓதா
சிரசு முதல் சேவடி வரை சீரங்கத்து அரசு அழகை
சேவித்து நிற்கும் சேவார்த்திகளின் விழிகள்.
....
சிவப்புக் கம்பளம் சுயொதனன் விரிப்பான்
அதை அறவே தவிர்த்து
விதுரன் குடிலில் வசிப்பதை வரிப்பான்
சிந்தையில் வாஞ்சையை சேமித்து வைத்தவன்
கந்தையில்கொண்ர்ந்த கைப்பிடி அவலை
ஆசை ஆசையாய் தின்பான்
அமுதம் அமுதம் என்பான்
வருக வருக என வருந்தி அழைப்பினும்
மெய்யை நினையார் மாளிகை விருந்தில்
கையை நனையான்
சார்வபௌமனாய் இருந்து
சக்கரம் சுழற்றுவான்
சிசுபாலனொத்தவர்
சிரசினைக் கழற்றுவான்
....
அவன் அறிவான் எப்பொருளும்
அவனை அறியா எப்பொருளும்.
ஆற்றுவான் அனேக மாயம்
ஆரே கற்பிக்க வல்லார் அவற்றிற்க்கு நியாயம்?
........தொடரும்
***** மதுரகவியழ்வார் பாடியது கண்ணினுண் சிறுத்தாம்பு என்ற ஒரேபாசுரம்.
அது 11 பாடல்கள் கொண்டது. அவைகளயும் அவர் பெருமாள் மேல் அன்றி தன் குரு
சடகோபர் என்று அழைக்கப்படும் நம்மாழ்வார் மேல் அமைத்த பாடல்களே ஆகும்..
அவ்வளவு குரு பக்தி.
மற்றைய ஆழ்வார்கள் பாடியவை எல்லாமே பெருமாள் மேல் அமைத்த பாசுரங்கள்.
அனேகமாக எல்லாமே ஒவ்வொன்றும் 11 பாடல்களாக அமைக்கப்ப்பட்டவை.

No comments:
Post a Comment