Saturday, November 9, 2024

உயிராவணம் - திருநாவுக்கரசர் தேவாரம் - திருவாரூர் பதிகம்

 

உள்ளத்தில் உயிர் ஓவியம்

 

அப்பர் சுவாமிகள்திருவாரூர் பதிகம் – UYIRAAVANAM – உயிராவணம்

 

உயிரா வணம் இருந்துஉற்று நோக்கி,

                 உள்ளக்கிழியின் உரு எழுதி,

உயிர் ஆவணம் செய்திட்டுஉன் கைத் தந்தால்,

                உணரப்படுவாரோடு ஒட்டிவாழ்தி;

அயிராவணம் ஏறாதுஆன் ஏறு ஏறி,

                அமரர் நாடு ஆளாதேஆரூர் ஆண்ட

அயிராவணமேஎன் அம்மானேநின்

                அருள்   கண்ணால் நோக்காதார் அல்லாதாரே.

 

உயிரா() (ண்)ணம் = அதாவது உயிர்த்தல் இல்லாதவாறு மூச்சை அடக்கி

                      (உயிர் இராமல் போகும் வண்ணம்  முச்சை அடக்கி

உற்று நோக்கி 

                 தியானத்தில் இருந்து,

உள்ளக்கிழியின் உரு எழுதி = தன் உள்ளமாகிய திரைசீலையில் இறைவன்  படம் வரைந்து

  

உயிர் ஆவணம் - தன் உயிரை அடிமை சாசனம் போல் செய்து

 உன் கைத் தந்தால் = உன்னிடம் தரும்

 உணரப்படுவாரோடு ஒட்டிவாழ்தி = அத்தகைய அடியவரோடுதானே  நீ ஒட்டி வாழ்கிறாய்!

 

அயிராவணம்  என்னும் கையிலை யானை ஏறாமல்

(ஆன்)வலிமை மிக்க எருது ஏறி

அமரர் தேவர் நாட்டை நீ ஆளாமல்

திருவாரூர் மேல்  ஏறி அமர்ந்து ஆளும்  

(சந்தேகமே) இரா வண்ணம் - சந்தேகமே இல்லாமல்   செய்த அம்மானே

 

உன் அருள் கண் மேலே சொன்ன அத்தகைய  உண்மை பக்தர்கள் மீது தானே  விழுகிறது!

 ===========================

இதையே இப்படியும் கூறுகிறார் ஒருவர்:

 

சிவபக்தர்கள் சிவபெருமானை தம் உள்ளத்திலே தியானித்துச் சமாதி நிலையை அடைவார்கள். எல்லோருடைய தியானத்துக்கும் உரிய 'பொருளாக இருக்கும் இறைவனோ வேறு யாரையோ தியானம் பண்ணித் தவம் செய்கிறானாம்.  அவனுக்கு மேலே ஒரு தெய்வம் இருந்தால்தானே அவனால் அப்படி தியானம் பண்ண முடியும்?   அப்படி இல்லையே!

அவன் ஒரு தெய்வத்தை தன் உள்ளத்திலே நிறுவித் தியானம் செய்கிறான் என்ற இந்த இரகசியத்தைக் குமரகுருபர முனிவர் சொல்கிருர்; மீணாட்சியம்மை பிள்ளைத்தமிழில்  இப்படி பாடுகிறார்

தொடுக்கும் கடவுள் பழம் பாடல் தொடையின் பயனே,

நறைபழுத்ததுறைத்தீந் தமிழின் ஒழுகு நறும் சுவையே,

அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு ஏற்றும் விளக்கே ,

வளர்சிமய இமயப் பொருப்பில் விளையாடும் இளமென் பிடியே எறிதரங்கம் உடுக்கும் புவனம் கடந்து நின்ற ஒருவன் திருவுள் ளத்தில் அழகு ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோ வியமே

மதுகரம் வாய் மடுக்கும் குழற்காடு ஏந்தும் இள வஞ்சிக் கொடியே வருகவே மலயத் துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே

 

இப்படி புவனங்களையெல்லாம் கடந்து நிற்கின்ற எம்பெருமான் சிவபெருமான் தான்    தன்  மூச்சுக்கூட விடாமல் யோகத்தில் இருந்து தன் உள்ளத்தில் ஒருவருடைய அழகு ஒழுக ஒரு ஒவியத்தை எழுதிக் கொண்டு அதையே உற்றுநோக்கித் தவம்கிடந் தானம்! அந்த மூர்த்தி யார்? அம்பிகைதான்! " .

இந்த கருத்தை  திருநாவுக்கரசு சுவாமிகள் வேறு விதமாக சிவபெருமானை நோக்கி பக்தர்கள் தவம் செய்வதாக மாற்றி பாடல் அமைக்கிறார்.

இந்த இரண்டு பாடல்களும் தமிழ் மொழியில் அருமையான பாடல்கள் ஆயின

 

 

 

 


No comments:

Post a Comment